K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

பாம்பு பிடிக்க போன வீரருக்கு நேர்ந்த பரிதாபம்.. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கோவையில் குடியிருப்புப் பகுதியில் புகுந்த பாம்பினை பிடிக்க முயன்ற போது பாம்பு பிடி வீரரை கடித்த பாம்பு. மருத்துவமனையில் பாம்பு பிடி வீரர் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

லஞ்ச பணத்துடன் குளத்தில் குதித்த கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம்!

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கிய விஏஓ குளத்தில் குதித்து தப்ப முயன்ற நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து கோவை தெற்கு ஆர்.டி.ஓ உத்தரவிட்டு உள்ளார்.

ED விசாரணைக்கு தடை? டாஸ்மாக் நிறுவனம் மனு

அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல்

தமிழ்நாட்டில் காவல் நிலையங்களை திமுகவினர் பூட்டிவிட்டார்களா? - அண்ணாமலை கேள்வி

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் அதிகரித்திருப்பதாகவும் அண்ணாமலை தாக்கு.

Police Encounter: கொள்ளையன் தப்பியோட்டம்.. சுட்டு பிடித்த போலீஸ்

தப்பியோட முயன்றபோது கொள்ளையன் தாக்குதலில் ஈடுபட்டதால், தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு.

தமிழகத்திற்குள் தெரு நாய்களை விட முயற்சி | Kerala Street dogs | Kanyakumari | Kumudam News

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட தெருநாய்களை தமிழகத்திற்குள் விட முயற்சி

கால்நடை வைத்திருப்பவரா நீங்கள்? நிவாரணம் அறிவித்த அமைச்சர்

அதிமுக எம்எல்ஏ கே.சி.கருப்பணன் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி அறிவிப்பு.

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட காவலர் உடல்.. மதுரையில் பரபரப்பு

மதுரை ஈச்சனேரி பகுதியில் பாதி எரிந்த நிலையில் தனிப்படை காவலர் உடல் மீட்பு

ரேசன் பொருட்கள் வாங்குபவர்களின் கவனத்திற்கு..அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நியாய விலைக்கடைகளின் மூலம் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் குறித்த முக்கிய தகவல் ஒன்றினை கூறியுள்ளார் அமைச்சர்.

#BREAKING | திமுக கொடி கம்பங்கள் இருக்கக்கூடாது.. ஷாக் உத்தரவு போட்ட துரைமுருகன்

திமுகவினர் தாங்களே முன்வந்து 15 நாட்களுக்குள் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என துரைமுருகன் உத்தரவு

Sir John Hubert Marshall-க்கு ரூ.50 லட்சம் மதிப்பில் சிலை.. திறந்து வைத்தார் முதல்வர்

சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இனி இந்த இடத்தில் கூட்டமாக கூடக்கூடாது.. போலீஸ் போட்ட புது ரூல்!

வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த அனுமதி இல்லை.

ஓபிஎஸ் பேச நாங்கள் வாய்ப்பு வழங்க முடியாது-சபாநாயகரிடம் வேலுமணி திட்டவட்டம்

ஓபிஎஸ்-ஐ  காண்பித்து அவர் பேச வாய்ப்பு கேட்கிறார் என்பது போல கேட்க, அதற்கெல்லாம் நாங்கள் எப்படி அனுமதி கொடுக்க முடியும். என்னை இதில் கோர்த்து விட வேண்டாம் என்பது போல சபாநாயகரை சைகை காண்பித்து விட்டு வேகமாக தன் இருக்கையில் வந்து அமர்ந்து விட்டார் எஸ்.பி. வேலுமணி. 

மகன்களோடு நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்- என்ன வழக்கு?

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட  வழக்கில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

காவல் அதிகாரி கொலை வழக்கு- அதிரடி காட்டும் போலீஸ்!

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கொலை தொடர்பாக 3 தனிப்படை அமைப்பு

மாதம் 90 லட்சம்.. குடும்பத்தோடு தற்கொலை செய்த டாக்டர்- போனில் மிரட்டியது யார்?

தூக்கிட்டு தான் மருத்துவர் உட்பட 4 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் தகவல். ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய் திரட்ட முடியாததால் மருத்துவர் குடும்பத்தினர் சோக முடிவை தேடியதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

பாமக முகுந்தனுக்கு என்னதான் ஆச்சு? பைசலாகாத பஞ்சாயத்து?

முகுந்தன் இளைஞர் அணித் தலைவராக அறிவிக்கப்பட்டு இரண்டரை மாதங்கள் கடந்துவிட்டபோதும் கட்சிப் பணிகளில் தலைகாட்டாமல் இருப்பது மட்டுமின்றி, ஆண்டுதோறும் வெளியிடப்படும் பாமக நிழல்நிதி அறிக்கை வெளியீட்டிலும்கூட அவர் கலந்துகொள்ளவில்லை.

ஆறுகளின் தூய்மை பணி - அறிக்கை அளிக்க ஆணை!

தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

பக்தர்கள் மரணம்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

2 பக்தர்களும் உடல்நலக்குறைவால் தான் உயிரிழந்ததாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம்.

ADMK-வுடன் கூட்டணி தொடருமா? Premalatha Vijayakanth சொன்ன பதில்!

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக இடம் பெற்றிருந்தது.

Annamalai Latest Tweet: 20 லட்சம் எட்டியாச்சு.. அண்ணாமலை வெளியிட்ட முக்கிய தகவல் | NEP 2020 | BJP

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக இதுவரை 20 லட்சம் பேர் கையெழுத்து -பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

திமுக அரசுக்கு அவமானமாக இருக்காதா?...தொடர் கொலைகள் – இபிஎஸ் கண்டனம்

தன் நேரடி கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு இருப்பதாக போட்டோஷூட் வசனம் பேசியதை நினைவிற்கொண்டு, அந்த இரும்புக்கரத்தின் துரு நீக்கி இனியேனும் செயல்படுத்த வேண்டுமென வெற்று விளம்பர திமுக மாடல் அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்

பெரியார் குறித்த சர்ச்சைப் பேச்சு- சீமான் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்கக்கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிசய வாழைத்தார்.. தாலி கட்டி,பொட்டு வச்சு செல்பி எடுக்க திரளும் பக்தர்கள்

நாகையில் வாழைப்பூ கீழிருந்து மேல்நோக்கி வளர்ந்து பார்ப்பதற்கு ஐந்து தலை நாகம் போல இருப்பதால் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அந்த வாழைத்தாரை ஆச்சரியத்துடன் பார்த்து செல்லுகின்றனர்.

சொத்து வரி கட்டாத கடைகளுக்கு குப்பைத் தொட்டியால் நெருக்கடி- மழுப்பும் மாநகராட்சி!

மதுரை மாநகராட்சியில் சொத்துவரியினை நீண்ட காலம் பாக்கி வைத்துள்ள வணிக கட்டிடங்கள், வீடுகள் முன்பு குப்பை தொட்டியினை வைத்து கட்டிட உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கையை மாநகராட்சி ஊழியர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.