K U M U D A M   N E W S
Kumudam Ad

200 தொகுதிகள் இலக்கு.. காங்கிரஸை கழற்றிவிடுகிறதா திமுக? தலைமையின் பலே திட்டம்!

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 தொகுதியில் போட்டியிட்டு 200 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பது மேடைக்கு மேடை திமுகவினரின் பேச்சாக இருக்கிறது. முதலமைச்சர் முதல் திமுக அமைச்சர்கள் வரை யார் பேட்டி கொடுத்தாலும் திமுக 200 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பது உறுதிய சூளுரைத்து வருகின்றனர். அப்படியெனில் மீதமுள்ள 34 தொகுதிகளை தான் கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கப்போகிறதா? அல்லது கூட்டணி கட்சிகளை கழற்றிவிடப் போகிறதா? என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஆல் பாஸ் ரத்து.. தமிழகத்திற்கு பொருந்துமா..? அன்பில் மகேஷ் விளக்கம்

தமிழக பள்ளிகளில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறையே தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

வானிலை நிலவரம்.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் இப்போது இல்லை... சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

"வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள், SC/ST மற்றும் மகளிருக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யாமல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது” என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்.. விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

தமிழகம் முழுவதும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யானை வழித்தடத்தில் மண் எடுப்பு - நீதிமன்றம் சரமாரி கேள்வி

கோவையில் யானை வழித்தடத்தில் 5 லட்சம் கனமீட்டர் மண் எடுத்தது யார், யாருக்கு வழங்கப்பட்டது? யார் பயனாளிகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டங்ஸ்டம் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - தமிழக அரசு தீர்மானம்

மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்ய வேண்டி சிறப்பு தீர்மானம் சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார்

ரூ.5000 கோடி நிலத்தை மீட்கக் கோரிய வழக்கு.. தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான 5000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை மீட்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக, கேரள அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்

முல்லைப் பெரியாறு அணையில் ஆண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்காத கேரள அரசுக்கு கண்டனம் - இபிஎஸ்

TVK சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் –பேசு பொருளானதால் பரபரப்பு

சட்டமேதையின் ஆசி, 2026ல் சாணக்யர் ஆட்சி என கோவையில் தமிழக வெற்றிக் கழகம் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.