K U M U D A M   N E W S

நாட்டிற்கே முன்னோடி திட்டம்.. அமைச்சர் சொன்ன தகவல்..

அண்ணா பல்கலைக்கழகத்தை தரம் உயர்த்த ரூ.500 கோடி ஒதுக்கீடு

மாற்றுத்திறனாளிகளுக்கு தரமான அறிவிப்பு..

ரூ.120 கோடியில் 700 பழைய பேருந்துகளை புதுப்பிக்க நடவடிக்கை பட்ஜெட்டில் அறிவிப்பு

மாவட்ட செயலாளர்கள் நியமனம்.. தவெக நிர்வாகிகளோடு விஜய் சந்திப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் 19 கட்சி மாவட்ட செயலாளர்கள் பட்டியலை  அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.முன்னதாக மாவட்ட பொறுப்பாளர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

TVK Vijay-க்கு கார் ஓட்டியவர் மகனுக்கு பதவி

5 கட்டமாக மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் 6ம் கட்ட பட்டியல் வெளியீடு

936 இடங்களில் நேரலை – அதிகரிக்கும் தமிழக பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு

மார்ச் 15ம் தேதி (சனிக்கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் வேளாண் நிதிநிலை அறிக்கையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் எல்.இ.டி. திரையின் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. 

திடீரென பெய்த கனமழை..நெற்பயிற்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை..!

அரியலூரில் கடந்த இரு தினங்கள் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் நீரில் சாய்ந்து சேதமடைந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

ஊட்டி, கொடைக்கானலுக்கு போறவங்க இதையெல்லாம் கவனத்துல வச்சிகோங்க...கோர்ட் போட்ட அதிரடி  ஆர்டர்

வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதற்கு தேவையான கூடுதல் காவல்துறையினரை பணியில் அமர்த்துவதற்கு டிஜிபிக்கு உத்தரவிட்டனர்

பால் விவசாயிகளுக்கு தரவேண்டிய ஊக்கத்தொகை என்னாச்சு? விவசாய சங்கம் எழுப்பிய கோரிக்கை

தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றி வரும் விவசாயிகளுக்கு கடந்த நான்கு மாதமாக நிலுவையில் உள்ள ரூபாய் 120 கோடிக்கும் மேற்பட்ட ஊக்கத்தொகையை உடனடியாக விடுவித்து பால் உற்பத்தி செய்யும் 8 லட்சம் விவசாயிகளின் நலனை காக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதிகரிக்கும் நாய்கள் தொல்லை...

சென்னையில் நாய்கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணைக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மூட்டை மூட்டையாக கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்... மக்கள் அவதி

மருத்துவக் கழிவுகளை பிளாஸ்டிக் கவர்களில் மூட்டைகளாக கட்டி சாலையோரம் வீசிச் சென்றுள்ள அவலம்

காப்பகத்தில் முறையான பாதுகாப்பின்றி தங்கி இருந்த 24 குழந்தைகள் மீட்பு..!

உசிலம்பட்டி அருகே குழந்தைகள் காப்பகத்தில் முறையான பாதுகாப்பின்றி தங்கி இருந்த 24 குழந்தைகள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர்கள் மீது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சரியானதே - கிருஷ்ணசாமி கருத்து

பள்ளிகளில் பாலியல் தொடர்பான விவகாரங்களில் ஆசிரியர்கள் மீது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சரியானதே என்றும் அதனை நான் வரவேற்கிறேன் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்கள்...அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

பாக்கி இழப்பீட்டு தொகையை வழங்க மூன்று வார அவகாசம் வழங்கக் கோரினார்.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மூன்று வாரங்களில் பாக்கி இழப்பீட்டை, பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிப்படையான முறையில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.    

கடத்தப்பட்ட ரயிலில் 155 பேர் பத்திரமாக மீட்பு.. ராணுவ வீரர்கள், போலீசார் என 30 பேர் உயிரிழப்பு

கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட ரயிலில் சிக்கி கொண்ட 400 பயணிகளில் 155 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ரயிலில் பயணித்த ராணுவ வீரர்கள், போலீசார் என 30 பேர் உயிரிழந்த நிலையில், பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 27 பேர் பலியாகினர். தொடர்ந்து ரயில் உள்ள எஞ்சியோரை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதய அறுவை சிகிச்சையில் சாதனை - இம்பெல்லா பம்ப் பொருத்தம்

தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இதயவியல் துறை மருத்துவர்கள் இதயத்தில் இருந்து ரத்தத்தை பம்ப் செய்து உடலின் பிற உறுப்புகளுக்கு அனுப்புவதற்கு தற்காலிகமாக இம்பெல்லா என்ற பொறியியல் சார்ந்த இதய பம்பை பயன்படுத்தி 80 வயது முதியவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்து சாதனைப் படைத்துள்ளனர்.

‘மாஸ்’ என நினைத்து கல்வீசிய மாணவர்கள் – கேஸ் போட்டு தூக்கிய காவல்துறை

இதுபோன்று ரயிலில் பிரச்னையில் மாணவர்கள் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு குப்பை தொட்டி கூட இல்லையா..? அரசு அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

கன்னியாகுமரியில் குப்பைகளை சேகரிக்க ஒரு குப்பை தொட்டி கூட அமைக்காத புகாரில், அரசு அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஓட்டு கட்டடத்தில் கல்வி பயிலும் அவலம்... போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கட்டட வசதி கோரி பள்ளி. மாணவர்கள் போராட்டம்

தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கும் கனமழை

கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை

பச்சையப்பன் கல்லூரிக்கு காவல்துறை கடிதம்

"வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்"

கோழிகளுக்கு ரூ.100, ஆடுகளுக்கு ரூ.4000 தானா? அரசிடம் கேள்வி எழுப்பும் விவசாயிகள்

தெருநாய்கள் கடித்து வளர்ப்பு கால்நடைகள் உயிரிழக்கும் நிலையில் அதற்கான இழப்பீடு தொகையினை உயர்த்தி வழங்குமாறு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tollgate Smashed அடித்து நொறுக்கப்பட்ட புதிய சுங்கச்சாவடி என்ன காரணம்?

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரம் சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு...!

சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளை சூழ்ந்த வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ரயிலில் கற்களை வீசி அட்டூழியம் - வீடியோ வெளியீடு

சென்னை, கொரட்டூர் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அட்டூழியம் செய்த வீடியோ வெளியாகி பரபரப்பு

பாகிஸ்தானில் சுமார் 100 பேருடன் பயணிகள் ரயில் கடத்தல்.. 11 வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை தீவிரவாதிகள் கடத்திய விவகாரத்தில், தீவிரவாத அமைப்புகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். ரயிலில் 400க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில், 182 பேரை பிணைக் கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.