இந்தியா

முடிவுக்கு வந்த லட்டு விவகாரம் பொய்யை விற்ற களவாணிகள்.. தொழிற்சாலையும் இல்ல..நெய்யும் இல்ல..

திருப்பதி லட்டில் கலப்படம் செய்த சம்பவம் மொத்த இந்தியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தமிழக, ஆந்திர, உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைதும் செய்துள்ளனர். கைதான இவர்கள் வெறும் பொய்யை மட்டுமே வைத்து திருப்பதிக்கே மொட்டை போட்ட சம்பவத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

முடிவுக்கு வந்த லட்டு விவகாரம் பொய்யை விற்ற களவாணிகள்.. தொழிற்சாலையும் இல்ல..நெய்யும் இல்ல..
முடிவுக்கு வந்த லட்டு விவகாரம் பொய்யை விற்ற களவாணிகள்.. தொழிற்சாலையும் இல்ல..நெய்யும் இல்ல..

ஹோட்டல் உணவு பொருளில் கலப்படம் செய்வதே பெரும் பாவம். திருப்பதி ஏழுமலையானின் பிரசாதமான லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் கலப்படம் செய்தால், பாவம் சும்மா விடுமா? தொழிற்சாலையும் இல்லை... நெய்யும் இல்லை... வெறும் பொய்யை மட்டுமே முதலீடாகக்கொண்டு இப்படியான பாவத்தை செய்த தமிழக, ஆந்திர, உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்திருப்பது தான் அக்கட பூமியின் ஹாட் நியூஸ்! 

இதுகுறித்து விளக்கினார் ஆந்திராவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் புத்தூர் மதுசூதன ராவ். "திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு வழங்கவும், திருக்கோயில்களில் விளக்கு ஏற்றவும் தேவஸ்தானம் சார்பில் மிகப்பெரிய அளவில் நெய் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்காக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டெண்டர் விடப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம், திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் நெய் சப்ளை செய்ய டெண்டர் எடுத்தது. தொடர்ந்து அந்த நிறுவனம் பல டன் நெய்யை சப்ளை செய்தது. இந்தநிலையில், பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டில் தரம் குறைந்திருப்பதாக பரவலாக புகார்கள் எழுந்தன. இதனால், ஏ.ஆர்.டெய்ரி சப்ளை செய்த நெய்யில் கலப்படம் இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து, அந்த நெய்யின் மாதிரி குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு ஆணைய ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடந்த ஆய்வில் ஏ.ஆர்.டெய்ரி சப்ளை செய்த நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது உறுதியானது. 

இதையடுத்து, உடனடியாக தேவஸ்தானம் சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதோடு முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்தப் பிரச்னையை கையிலெடுத்தார். திருப்பதி லட்டில் கலப்படம் உள்ளது. மிருக கொழுப்பு கலந்துள்ளது' என்று அவர் சொல்ல. உலகெங்கும் உள்ள பெருமாள் பக்தர்களிடம் அச்செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உடனடியாக உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் பேரில் ஐதராபாத் பிரிவு சி.பி.ஐ. இணை இயக்குநர் வீரேஷ் பாபு, விசாகப்பட்டினம் சி.பி.ஐ. எஸ்.பி. முரளி ரம்பா மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சத்ய குமார் பாண்டே ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. 

இதில் திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் பல்வேறு முறைகேடுகள் செய்திருப்பது கண்டறியப்பட்டது. ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திடம் திருப்பதி திருமலைக்கு நெய் சப்ளை செய்யும் அளவிற்கு எந்தவித தொழிற்சாலை வசதியும் இல்லை. அதனால், ஏ.ஆர்.டெய்ரி சார்பில் உத்தரகாண்ட் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து டேங்கர் லாரிகளில் தேவஸ்தானத்திற்கு நெய் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏ.ஆர்.டெய்ரி ஊழியர்களிடம் விசாரித்ததில், திருப்பதி காளஹஸ்தியை அடுத்த பெனுப்பாக்கா பகுதியில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவி டெய்ரி பார்ம் நிறுவனம், ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தை அணுகி 'எங்களிடம் போதிய வசதிகள் இல்லை. அதனால் நாங்கள் டெண்டர் எடுத்தால் சிக்கலாகிவிடும். தமிழகத்தில் உள்ள நீங்கள் எடுத்தால் எந்தப் பிரச்னையும் இருக்காது. மற்றதை நாம் சேர்ந்து பார்த்துக்கொள்ளலாம்' என்று சொல்லி தேவஸ்தான டெண்டரில் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தை பங்கேற்கச் செய்துள்ளது. 

ஆனால், இவ்விரு நிறுவனத்திடமும் போதிய நெய் சப்ளை செய்வதற்கான வசதிகள் இல்லை என்பதால், உத்தரகாண்டில் போலோ பாபா ஆர்கானிக் பிரைவேட் லிமிடெட் நிறுவனர்களான பொமில் ஜெயின், விபின் ஜெயின் ஆகியோரை அணுகியுள்ளனர். அங்கும் போதிய வசதிகள் இல்லை. இதனால், பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து ஒரு கிலோ நெய் 355 ரூபாய் என்ற கணக்கில் வாங்கி தேவஸ்தானத்திற்கு 319 ரூபாய்க்கு கொடுத்துள்ளனர். இப்படி டன் கணக்கில் நெய் கொள்முதல் செய்து ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் பெயரில் திருமலைக்கு தொடர்ந்து லாரிகளில் அனுப்பி வந்துள்ளனர். 

355 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் நெய்யை 319 ரூபாய்க்கு சப்ளை செய்தால் நஷ்டம் ஏற்படாதா? என்கிற சந்தேகம் எழுந்து, அதுகுறித்து விசாரித்தபோது, 355 ரூபாய்க்கு வாங்கிய நல்ல நெய்யில் மிகவும் மலிவான மட்டரக நெய்யை கலந்து தேவஸ்தானத்திற்கு சப்ளை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். 

இதையடுத்து சில தினங்களுக்கு முன் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி உரிமையாளர் ராஜசேகரன், வைஷ்ணவி டெய்ரி நிறுவனர் அபூர்வா சாவ்லா மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பொமில் ஜெயின், விபின் ஜெயின் ஆகிய நான்கு பேரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர். 

அவர்களை திருப்பதி 2வது கூடுதல் அமர்வு மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தினர். இவர்கள் நான்கு - பேரையும் பத்து நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவர்கள் உடனடியாக திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை சி.பி.ஐ. கஸ்டடியில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்துள்ளது. இதனால், விரைவில் ஆந்திர அரசியலில் இன்னொரு புயல் வீசும்" என்றார்.