K U M U D A M   N E W S

தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்படும்- உயர்நீதிமன்றம் அதிரடி

தமிழக உள்துறை அமைச்சர் தீரஜ் குமார் நேரில் ஆஜராகவில்லை என்றால் அவருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள்... நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு... இடித்து அகற்றிய அதிகாரிகள்

ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றம்

2019ல் நடந்த கொலைச் சம்பவத்திற்கு அதிரடிதீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த ஆணவ இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பக்ரூதின் வழக்குகளை விரைந்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

போலீஸ் பக்ரூதின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: உயர் நீதிமன்ற வளாகத்திற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவு

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜாமின் வழங்கும்போது நிபந்தனைகளை எளிதாக்க அறிவுறுத்தல்

நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை விதித்து எந்தப் பயனும் இல்லை -சென்னை உயர்நீதிமன்றம்

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: உத்தரவுப்படி விசாரணை நடத்த வேண்டும்- நீதிபதிகள்

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தான் பிறப்பித்த உத்தரவுபடிதான் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெளிவுப்படுத்திய நீதிபதி காவல்துறை எல்லை மீறினால்  உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு வலியுறுத்தினார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கு.. புலன் விசாரணை தொடக்கம்

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கின் விசாரணையின் தடை நீக்கப்பட்டதை அடுத்து மீண்டும் புலன் விசாரணை துவங்கியுள்ளதாக  காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ரவுடிகளுக்கு எதற்கு பட்டப்பெயர்? உயர்நீதிமன்றம் கேள்வி

ரவுடிகளுக்கு பட்டப்பெயர் வைப்பதை போலீசார் தவிர்க்க வேண்டும்.

குட்கா முறைகேடு வழக்கு.. கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

குட்கா முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் இன்று வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"இனி பட்டப்பெயருக்கு No"காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை

ரவுடிகளுக்கு பட்டப்பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை

"ஊழலை இரும்புக்கரம் கொண்டு ஒழிப்போம்" - சென்னை உயர்நீதிமன்றம்

இரும்பை முதல் முறையாக பயன்படுத்தி இரும்பு காலத்தின் முன்னோடி தமிழகம் என பெருமைப்படும் நேரத்தில், ஊழலையும் இரும்புக்கரம் கொண்டு ஒழித்து உலகளவில் முன்னோடியாக இருப்போம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள்..  அறிக்கை தாக்கல் உயர்நீதிமன்றம் உத்தரவு..!

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை அமல்படுத்தியது குறித்து  அறிக்கை தாக்கல்  செய்யும்படி, தமிழக மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"ஒரு சொல் கூட பாலியல் துன்புறுத்தலே" - சென்னை உயர்நீதிமன்றம்

HCL நிறுவனத்தில் பணியாற்றிய மார்க்கெட்டிங் அதிகாரிக்கு எதிரான பாலியல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கு.. உயர்நீதிமன்றம் உத்தரவு

உணவு மற்றும் மளிகை பொருட்களை வீடுகளுக்கு விநியோகம் செய்யும் நிறுவனங்களின் டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில், தமிழக டிஜிபி மற்றும் டெலிவரி நிறுவனங்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு.. வெளியேற சொன்னால் தற்கொலை செய்து கொள்வோம்.. பொதுமக்கள் கவலை

அரும்பாக்கம் பகுதியில் வசித்து வரும் மக்களை வெளியேற கூறி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் தங்களை காலி செய்ய சொன்னால் தற்கொலை செய்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என  மூதாட்டி ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்தார். 

காவல்துறை மீதான வழக்கு.. வேலியே பயிரை மேய்வதா? - நீதிமன்றம் காட்டம்

"காவல்துறையினரே குற்றச்செயல்களில் ஈடுபடும் வழக்கை சாதாரணமாக | எடுத்துக்கொள்ள முடியாது."

வேலியே பயிரை மேய்வதா? காவல்துறையினர் மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி...!

வேலியே பயிரை மேய்வது போல்,  காவல்துறையினரே குற்றச்செயல்களில் ஈடுபடும் வழக்கை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மோசடி வழக்கில் பதிலளிக்க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நீதிமன்றம் உத்தரவு..!

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் மேல் விசாரணை நடத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம்.. நீதிமன்றம் தீர்வு காணும் என எச்சரிக்கை

தமிழ்நாட்டில் பல்கலைகழக துணைவேந்தர்கள் நியமனத்துக்கு எதிரான வழக்கு, ஆளுநர் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பதற்கு எதிரான வழக்குகளில் தீர்வு எட்டவில்லை என்றால் நீதிமன்றம் தீர்வு காணும் என தெரிவித்து வழக்குகளை இறுதி விசாரணைக்காக உச்சநீதி மன்றம் ஒத்திவைத்தது.

பழ. நெடுமாறன் வெளிநாடு சென்றால் நாட்டின் பாதுகாப்பு எப்படி பாதிக்கும்..? நீதிபதி கேள்வி

பாஸ்போர்ட்-டை புதுப்பிக்கக் கோரி, உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் அளித்த விண்ணப்பத்தை பாஸ்போர்ட் அலுவலகம் நிராகரித்த நிலையில் மூன்று வாரங்களில் விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்க பாஸ்போர்ட் அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

விக்கிரவாண்டி: சிறுமிக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு.. கைதான மூவருக்கு ஜாமின்

விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று வயது சிறுமி, பள்ளி கழிவு நீர் தொட்டில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம் கைதான மூவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. 

"யார் அந்த சார்" யாரும் எதிர்பார்க்காத பதிலை போட்டுடைத்த அண்ணாமலை 

"அண்ணா பல்கலை. பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்கள் அன்று"

பேரணிக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது ஏன்? - காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

புதிய தமிழகம் கட்சி பேரணிக்கு, முந்தைய நாள் அனுமதி மறுத்தது ஏன்? - சென்னை உயர்நீதிமன்றம்

பாமக தொடர்ந்த வழக்கு.. விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு

ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டத்தை அனுமதித்து, விதிமீறலில் ஈடுபட்ட சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 10-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.