F4 Car Race in Chennai : தாமதமாக தொடங்கும் கார் பந்தயம்.. பாதுகாப்பு பணியில் ஈடுகட்ட காவல் உதவி ஆணையர் மாரடைப்பில் மரணம்
F4 Car Race in Chennai : இன்று மதியம் 2.30 மணிக்கு கார் பந்தயம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பிடம் (FIA) இருந்து பாதுகாப்பு சான்றிதழ் கிடைக்காததால் பந்தயம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விரைவில் சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு அதிகாரிகள் சான்றிதழ் அளிப்பார்கள் என்றும் இன்று இரவு 7 மணிக்கு கார் பந்தயம் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.