சிஎஸ்கே கேப்டனாக ரிஷப் பண்ட்?.. தோனி, ருதுராஜ் இல்லையா.. மாறப்போகும் காட்சிகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்-க்கு பதிலாக டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்-க்கு பதிலாக டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சேலம் அருகே நடிகர் ஜீவா சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் ஜீவாவும் அவரது மனைவியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
பண மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இளவரசியின் உறவினர் பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் மது விருந்துக்கு சென்ற மாணவி கர்ப்பமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை வீரர் துஷார் தேஷ்பாண்டே வீசிய பவுன்சர் பந்தை, தோனி சிக்ஸர் அடித்ததையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்ததையும் நினைவு கூர்ந்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை இணை ஆணையரை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மெமோ வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, போதுமான எண்ணிக்கையில் போலீசார் நியமிக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் வந்த மின்னஞ்சலை அடுத்து, சைபர் கிரைம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
780 கோடி ரூபாய் வரி செலுத்தாததால் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது
அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு பேசிய வீடியோ பரம்பொருள் பவுண்டேஷன் என்ற யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது
விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்று குடும்பம் குடும்பமாக ஊர் திரும்பும் மக்கள். ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதி
விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்று குடும்பம் குடும்பமாக சென்னை திரும்பும் மக்கள். தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் - எறும்பு போல் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
விநாயகர் சதுர்த்தி, வார இறுதி நாள் விடுமுறை முடிந்த நிலையில் பொதுமக்கள் சென்னை திரும்புகின்றனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை நோக்கி வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல்
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
மகாவிஷ்ணு கைது கைது செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷிடன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தியதாக மகாவிஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விவகாரம் இப்போது காவல்துறை வ்சம் சென்றுள்ளது என தெரிவித்துள்ளார்.
அரசுப்பள்ளிகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசுப்பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மகாவிஷ்ணுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலியாவில் இருந்து வீடியோ வெளியிட்ட மகா விஷ்ணு, ''நான் பேசியதில் என்ன தவறு உள்ளது? நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. நாளையே சென்னை வந்து இது குறித்து போலீசிடம் விளக்கம் அளிக்க உள்ளேன்'' என்று விளக்கம் அளித்தார்.
தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள். மாணவர்கள் மத்தியில் என்ன பேச வேண்டும் என்று சொல்லியதற்கு மாறாக உளறித் தள்ளியதே சர்ச்சைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
சென்னை கோயம்பேடு பூச்சந்தையில், வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
நீலாங்கரை நிலமோசடி வழக்கு தொடர்பாக சென்னையில் 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அண்ணாநகரில் காவல் ஆய்வாளர் ஆனந்தபாபு வீடு மற்றும் சாஸ்திரி நகர், பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர், வேளச்சேரியிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புதிய கல்விக் கொள்கைக்கு மாற்று கிடையாது, அதனை அனைவரும் ஏற்க வேண்டும் - சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் பராமரிப்பு தொடர்பான உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துக் கொண்ட வழக்கில் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு அதிருப்தி
Senthil Balaji Case Updates : செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்.