சென்னை அண்ணா சாலையில் சமீபத்தில் ரூபாய் 46 கோடி மதிப்பீட்டில் 6.9 ஏக்கர் நிலப்பரப்பில் தமிழக அரசு கலைஞர் நூற்றாண்டு பூங்காவை உருவாக்கப்பட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இசை நீரூற்று, விளையாட்டுத்திடல், ஜிப்லைன் பயணம், கண்ணாடி மாளிகை என அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்பட்ட இந்த பூங்காவுக்கு `கலைஞர் நூற்றாண்டு பூங்கா' எனப் பெயரிடப்பட்டது.
இதில் ஜிப் லைன் எனப்படும் அந்தரத்தில் செல்லும் ரோப் கார் சற்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. சுமார் 20 நிமிடங்கள் தொழில்நுட்ப கோளாறால் ரோப் கார் அந்தரத்தில் தொடங்கியது.
இதில் பயணித்த இரண்டு பெண்கள் கூக்குரலிட்டு அழத் தொடங்கினர். சுமார் 20 நிமிடம் வரை ஊழியர்கள் போராடி பார்த்தும் ரோப் கார் செல்லாததால் உடனடியாக கயிறு மூலம் ரவுகாரை கட்டி இழுத்து பத்திரமாக இரண்டு பெண்களையும் மீட்டனர்.
தொழில்நுட்ப கோளாறால் தொங்கிய ரோப் காரில் மாட்டிக் கொண்ட பெண்கள் கதறியதை அடுத்து, அங்கு சுற்றுலாவிற்காக குவிந்த நூற்றுக்கணக்கான சுற்றுலா வாசிகள் கூச்சலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.