உலக நன்மை வேண்டி நடைபெற்ற சரபேஸ்வரர் யாக பூஜை!

திண்டுக்கல்லில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற சரபேஸ்வரர் யாக பூஜையில் ஜப்பானியர்களின் கலந்து கொண்டு சாமி தரிசனம் நடத்தினர்.

Mar 7, 2025 - 19:50
Mar 8, 2025 - 15:06
 0
உலக நன்மை வேண்டி நடைபெற்ற சரபேஸ்வரர் யாக பூஜை!
உலக நன்மை வேண்டி நடைபெற்ற சரபேஸ்வரர் யாக பூஜை!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே திருவாடுதுறை மகா சன்னிதானத்தின் சரபேஸ்வரர் பீடத்தில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற சிறப்பு யாக பூஜையில் 40-க்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் கலந்து கொண்டனர். 

தற்பொழுது உலகில் நடைபெற்று வரும் போர் மற்றும் கால நிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை சீற்றங்கள் ஆகியவற்றிலிருந்து விடுபட உலக நன்மை வேண்டி இந்த சிறப்பு யாகம் நடைபெற்றது. 

மஞ்சள் கிழங்கு, நாயுருவி, ஜாதிக்காய், மாசிக்காய், ஏலம், கிராம்பு, உள்ளிட்ட 108 வகையான மூலிகை பொருட்கள் யாக குண்டத்தில் விட்டு ஹோமம் வளர்த்தனர். 

கோபால் பிள்ளை சுப்பிரமணி என்போர் தலைமையில் 40க்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் யாக பூஜையில் கலந்து கொண்டனர். 

சிவாச்சாரர்களுடன் ஜப்பானியர்களும் மந்திரங்கள் ஓதி வழிபாடு செய்தனர். இதில் 25 பெண்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

கடந்த ஒரு மாதம் காலமாக தமிழ்நாட்டில் உள்ள சிவ பஞ்சபூத தலங்கள், அறுபடை வீடு முருகன் கோவில்கள் என ஆன்மீகப் பயணம் முடித்து பழனி வராகி கோயில், பூம்பாறை முருகன் கோவில், வடமதுரை சரபேஸ்வரர் மடம் ஆகியவற்றில் உலக நன்மை வேண்டி  சிறப்பு யாக பூஜைகள் நடத்தி 
வருகின்றனர். 

இதில் திருவாடுதுறை ஆதீனம், பழனி புலிப்பாணி ஆசிரமத்தை சார்ந்த சீடர்களான சிவாச்சாரியார்கள் இந்த யாக கேள்வி பூஜைகளை ஜப்பானியருடன் இணைந்து நடத்தினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow