லஞ்சம் கேட்ட அதிகாரி...பிச்சை எடுக்கும் போரட்டத்தில் இறங்கிய பெண்
அதிகாரிகள் லஞ்சம் கேட்பதால் தன்னிடம் பணம் இல்லாததால் லஞ்சம் கொடுக்க ‘பிச்சை போடுங்கள்’ என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குன்னம் பகுதி சமூக ஆர்வலருடன் பெண் பிச்சை எடுக்கும் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகாவுக்கு உட்பட்ட அகரம் சீகூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜ பிரதாப்-முத்தமிழ்ச்செல்வி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில், இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
லஞ்சம் கேட்ட அதிகாரி
ராஜபிரதாப் வெளிநாட்டிற்கு சென்றுவிட்ட நிலையில், தற்போது கடந்த வருடம் முத்தமிழ்ச்செல்வி தங்களுக்கு தனி குடும்ப அட்டை வேண்டும் என குன்னம் வட்டார வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பித்துள்ளார். இதற்கு அகரம் சீகூர் நியாய விலைக்கடை ஜெயராஜ் என்பவர் குடும்ப அட்டை பெற குறிப்பிட்ட தொகை லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
Read more:ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் மனு தாக்கல்
ஜெயராஜ் பேசியதை முத்தமிழ்ச்செல்வி போனில் ரெக்கார்டர் செய்து குன்னம் வட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் லஞ்சம் தராததால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி இரண்டாவது முறையாக விண்ணப்பித்தும் தனது குடும்ப அட்டை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், குன்னம் வட்டாட்சியரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறியும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தனக்கு குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
பிச்சை எடுக்கும் போராட்டம்
மேலும், பாதிக்கப்பட்ட முத்தமிழ்ச்செல்வி குடும்ப அட்டை விண்ணப்பிக்க அதிகாரிகள் லஞ்சம் கேட்பதால் தன்னிடம் பணம் இல்லாததால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க ‘பிச்சை போடுங்கள்’ என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குன்னம் பகுதி சமூக ஆர்வலர் கோவிந்தராஜ் என்பவருடன் பிச்சை எடுக்கும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
Read more: மின்னல் வேக ஸ்டம்பிங்.. 0.12 நொடியில் SKY விக்கெட்டை எடுத்த Dhoni!
இது தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது.இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
What's Your Reaction?






