ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சுமத்திய குற்றச்சாட்டுகளை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் ட்ரோன் (Drone) மூலமாகத் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், சர்வதேசக் கடல் எல்லையில் ஈரானின் இந்த நடவடிக்கை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்காவின் இந்தக் கடுமையான குற்றச்சாட்டை ஈரான் அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது.
இது குறித்து இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கப்பல் மீதான தாக்குதல் விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை. ஒரே வாரத்திற்குள் மூன்று இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி, மூன்று அப்பாவி இந்திய மாலுமிகளைக் கொன்ற கொடூரமான உண்மையை மறைக்கவும், உலகப் பொதுமக்களின் கவனத்தை அதிலிருந்து திசைதிருப்பவுமே அமெரிக்கா இப்படிப் பரிதாபகரமாக முயல்கிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சர்வதேசக் கடல் பகுதியில் அமெரிக்கா விதித்துள்ள கடல்வழி முற்றுகை மற்றும் அதற்கு எதிரான தாக்குதல்களால் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்திய மாலுமிகளின் மரணத்திற்குப் பொறுப்பேற்காமல் அமெரிக்கா தங்கள் மீது பழி சுமத்துவதாக ஈரான் தூதரகம் சாடியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் இந்த மோதல் போக்கு சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LIVE 24 X 7