மத்திய கிழக்கு பகுதியில் தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஜோர்டான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில், அமெரிக்காவிற்குச் சொந்தமான பல போர் விமானங்கள் முழுமையாக அழிக்கப்பட்டதாகவும், மேலும் பல விமானங்கள் கடுமையான சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், தங்கள் நாட்டில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களான இஸ்லாம் விரோத அமெரிக்கர்களை ஜோர்டான் நாட்டு மக்கள் விரட்டியடிக்க வேண்டும் என்றும் ஈரான் படைகள் அழைப்பு விடுத்துள்ளன.
முன்னதாக, தங்கள் நாட்டை நோக்கி வந்த ஈரானின் 3 ஏவுகணைகளைத் தாக்கி அழித்துவிட்டதாக ஜோர்டான் ராணுவம் தெரிவித்திருந்த சூழலில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜோர்டான் மட்டுமின்றி, சிரியாவில் அமைந்துள்ள அமெரிக்கப் படைத் தளங்களின் மீதும் ஈரான் படைகள் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதனைத் தொடர்ந்து, ஈராக்கின் வடக்குப் பகுதிகளிலும் ஈரான் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், ஈராக் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த தகவலை ஈரான் தரப்பு இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் மாறி மாறித் தாக்கி வருவதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

LIVE 24 X 7