15க்கும் மேற்பட்ட சித்தா கிளினிக்குகளுக்கு சீல்
நீலகிரி மாவட்டம் கூடலூரில் மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்ட நிலையில் 15க்கும் மேற்பட்ட சித்தா கிளினிக்குகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்ட நிலையில் 15க்கும் மேற்பட்ட சித்தா கிளினிக்குகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அனுமதியின்றி நோ பார்க்கிங் போர்ட் வைப்பதற்கு போக்குவரத்து காவல்துறை தடை விதித்துள்ளது. மீறுவோர் மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி ஜாங்கிட் குற்றவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.
சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக உள்ள எஸ்.அல்லி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
National Green Tribunal : பள்ளிக்கரணை சதுப்புநிலம், வேளச்சேரி நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பாக உள்ள அரசு கட்டிடங்களை அகற்றி அதை கிண்டி ரேஸ் கிளப்புக்கு இடமாற்றலாம் அல்லது ரேஸ் கிளப் நிலத்தை புதிய நீர்நிலையாக மாற்றலாம் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் யோசனை தெரிவித்துள்ளது.
Private School Fees Hike in Chennai : சென்னை மடிப்பாக்கத்தில், அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கூறி ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியை மாணவர்களின் பெற்றோர் முற்றுகையிட்டனர். இதனால் ஒருமணி நேரத்திற்கும் மேலாக சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Fishermen Protest in Pondicherry : புதுச்சேரியில் கடற்கரை ஓரம் தூண்டில் முள் வளைவு அமைக்காத்தை கண்டித்து மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Kallakurichi Kallasarayam Issue : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்திற்கு மேலும் 3 மாத கால நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Palani Panchamirtham Issue : பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக கோவையை சேர்ந்த பாஜக தொழிற்பிரிவு மாவட்ட துணைத்தலைவர் செல்வகுமார் மீது பழநி அடிவார போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Actor Mukesh Arrest : பாலியல் வழக்கில் கேரள நடிகரும் எம்.எல்.ஏ.வுமான முகேஷ் கைது செய்யப்பட்டார். ஆனால், இந்த வழக்கில் ஏற்கனவே முன் ஜாமின் பெற்றதால் சில நிமிடங்களிலேயே விடுவிக்கப்பட்டார்.
Fake NCC Camp Issue in Krishnagiri : கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் ஜாமின்கோரி மனு தாக்கல் செய்தனர். முக்கிய குற்றவாளியான சிவராமனுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் தொடர்பு இருப்பதால் ஜாமின் வழங்கக்கூடாது என காவல்த்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Thug Life Movie Shooting Update : மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'THUG LIFE' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
Sri Lanka New Prime Minister Harini Amarasuriya : இலங்கையின் பிரதமராக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரியவை இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக நியமித்தார்.
MUDA Land Curruption Case on Siddaramaiah : முடா முறைகேட்டில் சித்தராமையா மீது விசாரணை நடத்த ஆளுநர் அனுமதி அளித்த நிலையில் நாளை அமைச்சரவை அவசர கூட்டத்திற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்
Tiruppur Protest : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவில்பாளையத்தில் கோயில் நிலத்தை ஏலம் விடுவதாக அறநிலையத்துறை அறிவித்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
AIADMK Women Wing Protest Against DMK : திமுக அரசை கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மகளிர் அணியினர் முழக்கமிட்டனர்.
Madurai Rajaji Hospital Accident : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளே கட்டிட மேற்கூரை பெயர்ந்து விழுந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தாமாக முன்வந்து வழக்குப்பதிந்து விசாரணைக்கு எடுத்தது. விசாரணையில் சுகாதாரத்துறை செயலாளர், மதுரை மருத்துவ கல்லூரி முதல்வர், பொதுப்பணித்துறை பொறியாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
Kalaignar Kalaithurai Vithagar Award 2024 : கலைஞர் நூற்றாண்டு நினைவை போற்றும் வகையில் கவிஞர் மு.மேத்தா, பின்னணிப் பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Tamil Nadu Rain Update Today : தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Water Canel Issue in Ramanathapuram : ராமநாதபுரத்தில் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார இளைஞர்கள் தாமாக முன் வந்து அனுமதி கோரியும் ஏன் அனுமதி வழங்கவில்லை. மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
TN Govt Teachers Appointment Suspension : நிதி சிக்கல் காரணமாக ஆசிரியர் பணி நியமனங்களை நிறுத்தி வைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், கல்லூரி உதவி பேராசிரியர் பணியிட நியமனங்கள் கேள்விக்குறியாகியுள்ளது.
NIA Raids in Chennai : பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹீரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கில் சென்னை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை முதல் NIA சோதனை நடத்தியது. இந்நிலையில் சென்னை வெட்டுவாங்கேணியில் முகமது ரியாஸ் மற்றும் சையது அலி ஆகியோர் வீடுகளில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றுள்ளது
Actress Trisha Krishnan Case : மதில்சுவர் தொடர்பாக அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னையில் இருதரப்பும் சமரசம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நடிகை திரிஷா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
Director Mohan G Arrest on Palani Panchamirtham : பழநி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலப்பதாக அவதூறு பரப்பியதாக சென்னை காசிமேட்டில் வீட்டில் இருந்த இயக்குநர் மோகன் ஜியை போலீசார் கைது செய்தனர்
Cuddalore Mayor Visit Govt School : கடலூரில் பள்ளியை ஆய்வு செய்ய மேயர் சென்ற நிலையில் சுத்தம் செய்யாமல் இருந்த வகுப்பறையை சுத்தம் செய்தார். மேலும் வகுப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.