Sensex Today Updates in Tamil : மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 85,000 புள்ளிகள் என்ற வரலாறு காணாத உச்சம் தொட்டு வர்த்தகம் ஆகி வருகிறது. 4 நாட்களுக்கு முன்புதான் சென்செக்ஸ் அதிகபட்சமாக 84,000 புள்ளிகள் என்ற உச்சத்தை தொட்டது.
TN Cabinet Reshuffle 2024 : உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
Mysterious Fever in Madurai : மதுரையில் காய்ச்சல் காரணமாக ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பருவ மழை பெய்யும் காலங்களில் காய்ச்சல் அதிகமாகும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது
Nagapattinam School Student Dies in Govt Bus Accident : நாகை அருகே குருக்கத்தி பைபாஸ் சாலையில் அரசு பேருந்து மோதி 11ம் வகுப்பு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணவியுடன் வந்த அவரது தம்பி படுகாயங்களுடன் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
CM Stalin Visit: சென்னை கொளத்தூர் பகுதியில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு சென்ற முதலமைச்சர் கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
Gold Price Today in Chennai : சென்னையில் இன்று தங்கத்தின் விலை இதுவரை இல்லாத புதிய உச்சமாக சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து 7,000-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து ரூ.56,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
NIA Raids in Kanniyakumari : பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹீரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கு தொடர்பாக NIA அதிகாரிகள் கன்னியாகுமரியில் இளங்கடை பகுதியில் உள்ள முகமது அலி என்பவரது இல்லத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்
A Raja Speech About Aadhav Arjuna : ஆதவ் அர்ஜுனா கருத்தை திருமாவளவன் ஏற்க மாட்டார். ஆதவ் அர்ஜுனா மீது திருமா கடுமையான நடவடிக்கை எடுப்பார் என ஆ.ராசா பேச்சு
NIA Raids in Chennai : சென்னை, புதுக்கோட்டை, கன்னியாகுமரியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹீரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கில் NIA சோதனை
Krishna River Water Supply in Chennai : கிருஷ்ணா நதி நீரின் வரத்தை பொறுத்து சென்னை குடிநீருக்காக திறக்கப்படும் என நீர்வளத்துறை தகவல். கண்டலேறு அணையில் இருந்து 1,300 கனஅடி நீர் திறப்பு, 5 நாட்களுக்கு பிறகு பூண்டி நீர்தேக்கத்தை வந்தடைந்தது
Petrol Bomb Thrown In ADMK Secretary House : தேனி மாவட்டம் சின்னமனூரில் அதிமுக நகர செயலாளர் பிச்சைக்கனி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு. நள்ளிரவு பிச்சைக்கனி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு மர்மநபர்கள் தப்பியோடியதால் பரபரப்பு
NIA Raids in Chennai : சென்னையில் ராயப்பேட்டை, தாம்பரம் பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹீரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கில் NIA சோதனை
TVK Jagadeesh Exclusive Interview : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லட்டில் கலப்படம் செய்திருந்தால் நானும் என் குடும்பமும் நாசமாக போகவேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் சபதம் எடுத்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஜம்பு என்ற ரவுடியை வழக்கு ஒன்றில் கைது செய்வதற்காக போலீசார் சென்றனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால் அவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
சென்னை நீலாங்கரை அக்கரை பகுதியில் ரவுடி சீசிங் ராஜா இன்று காலை போலீசார் என்கவுன்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அந்த இடத்தில் சோழிங்கநல்லூர் மாஜிஸ்திரேட் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் நடைபெற்ற சொகுசு கார்களின் கண்காட்சியில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மட்டும் வழக்கமான ஒன்றாக இருந்துவந்த சொகுசு கார் கண்காட்சிகள் தற்போது சென்னையிலும் நடைபெற தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியில் BMW, Benz, Audi, Mustang உள்ளிட்ட கார்களின் உயர் ரக மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக மாறுதல்கள் செய்யப்பட்டு மெருகேற்றப்பட்ட கார்களின் அணிவகுப்பும் திரட்டிருந்த இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை ரசித்து பார்த்ததுடன் இளைஞர்கள் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
சென்னையில் நடைபெற்ற சொகுசு கார்களின் கண்காட்சியில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மட்டும் வழக்கமான ஒன்றாக இருந்துவந்த சொகுசு கார் கண்காட்சிகள் தற்போது சென்னையிலும் நடைபெற தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியில் BMW, Benz, Audi, Mustang உள்ளிட்ட கார்களின் உயர் ரக மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக மாறுதல்கள் செய்யப்பட்டு மெருகேற்றப்பட்ட கார்களின் அணிவகுப்பும் திரட்டிருந்த இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை ரசித்து பார்த்ததுடன் இளைஞர்கள் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்பதால் அவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்ற சிபிசிஐடி கோரிக்கையை ஏற்று ஜாமின் மனுக்களை தள்ளுபடி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கேரளாவைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவியை மர்ம கும்பல் கடத்தி வந்து தேனியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் மாணவியை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டு சென்ற நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
மீனவர் பிரச்னையில் உறுதியான நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர் பெயரளவுக்கு மட்டுமே கடிதம் எழுதுகிறார். மத்திய அரசின் உறுதியான நடவடிக்கையை திமுக அரசால் நிர்பந்தித்து பெற முடியவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பதற்கு விதிமுறைகளை உருவாக்கிய பின்னரும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்ககுவதில் ஏன் தாமதம் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.