K U M U D A M   N E W S

தமிழ்நாடு

தொடர் விடுமுறை எதிரொலி...கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல்!

கொடைக்கானலில் வார விடுமுறை மற்றும் தமிழ் புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், சுற்றுலா தலங்களிலும், நகர்ப்பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவு!

கோவையில் ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் வரிச்சியூர் செல்வத்தை கைது செய்யவும், தேவைப்பட்டால் காலில் சுட்டு பிடிக்க காவல் துறையினருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோயில் வளாகத்தில் வணிக வளாகம் - நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில், வணிக வளாகம் கட்ட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது!

கோவையில் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஜான் ஜெபராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

“பிளவுவாத பாஜக...மக்கள் விரோத திமுக”- தவெக தலைவர் விஜய் சாடல்

தி.மு.க.வை மறைமுகக் கூட்டாளியாக ஏற்கெனவே தயார் செய்துவிட்ட நிலையில், தன்னுடைய பழைய பங்காளியான அ.இ.அ.தி.மு.க.வைப் பகிரங்கக் கூட்டாளியாகப் பா.ஜ.க. மீண்டும் கைப்பிடித்துள்ளது

அதிமுக மீது சவாரி செய்ய தான் பாஜக கூட்டணி அமைத்துள்ளது- திருமாவளவன்

கூட்டணி இல்லை என்றால், தமிழ்நாட்டில் பாஜக ஒரு சக்தியே இல்லை என்பதை மக்கள் உறுதிப்படுத்திவிடுவார்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பொன்முடி சர்ச்சை பேச்சு: அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஒரு மனிதனின் மனதில் இருக்கவே கூடாத குரூர வக்கிரத்தின் உச்சம், அமைச்சர் பொன்முடியின் பேச்சில் வெளிப்பட்டிருக்கிறது என இபிஎஸ் கண்டனம்

தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கனமழை...எங்கெல்லாம் தெரியுமா?

இடி மின்னலுடன் கூடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது

சென்னையில் நள்ளிரவில் மின்வெட்டு...ஆயிரக்கணக்கான மக்கள் கடும் அவதி

கோயம்பேட்டில் இருந்து மதுரவாயலுக்கு வரும் 33 கிலோ வாட் உயிர் அழுத்த கேபிளில் ஏற்பட்ட பழுதால் மின்வெட்டு

இபிஎஸ் அமைத்த கூட்டணி…அதிமுக ஆனந்தத்தில் மிதக்கிறது - கே.டி.ராஜேந்திரபாலாஜி

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியை பார்த்து விழி பிதுங்கி பதறிப்போய் இருக்கிறது திமுக கூட்டம் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு