மேலும், "'மா' விலை குறைவுக்கு காரணம் மாங்காயை கார்பெட் கல் கொண்டு பழுக்க வைக்கப்படுகிறது. அதை மக்கள் வாங்கி பயன்படுத்துவதால் உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதனால் தான் 'மா' விலை குறைந்ததுக்கு காரணம்" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "தவெக தலைவர் விஜய்க்கு கள் நிலைப்பாடு குறித்து 15 முறை கடிதம் எழுதியும் தற்போது வரை பதில் இல்லை. பொதுச்செயலாளர் ஆனந்தின் எண்ணை தொடர்பு கொண்டபோது அவரின் உதவியாளர்கள் தான் அழைப்பை எடுக்கிறார்கள். விஜய் கள் தொடர்பாக எந்த நிலைபாட்டில் இருக்கிறார் என்பது தெரியவில்லை.
தவெக தலைவர் விஜயை நேரில் சந்திக்க முடியாது. அவர் யானையில் அமர்ந்துள்ளார், நாங்கள் கீழே அமர்ந்துள்ளோம். அவரை சந்திக்க நான் நயன்தாரா, திரிஷா போன்று இருக்க வேண்டும். நாங்கள் சாதாரணமானவர்கள் என்பதால் எங்களுக்கான மரியாதை இல்லை" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "மத்திய அரசு வழங்கும் பத்ம விருதுகளில் விவசாய துறை சாதனையாளர்கள் என ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் சினிமாவில் பல துறைக்கு வழங்கப்படுகிறது. நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயத்திற்கு 50 விழுக்காடு விருது ஏன் ஒதுக்கக்கூடாது என எந்த அரசியல் தலைவரும் கேட்கவில்லை. ஏன் என்றால் எங்களை பல்வேறு விவசாயிகளாக பிரித்துவிட்டனர்" என்றார்.
LIVE 24 X 7









