சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள கடலோர மாவட்டங்களில் இடைவிடாமல் மழை பெய்யக்கூடும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளை ராணிப்பேட்டை, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (21.09.2026) நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (22.09.2026) நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு தமிழ்நாட்டில் மழையின் தாக்கம் படிப்படியாக குறையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை; பலத்த காற்றுக்கு வாய்ப்பு
மழை பெய்யும் நேரங்களில் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2.1 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து வரும் நிலையில் இந்த மழை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.
செப்.19-ம் தேதி மாவட்ட வாரியான மழை நிலவரம்
செப்டம்பர் 19-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் பகுதிகளில் பலத்த காற்று எச்சரிக்கை
செப்டம்பர் 19 மற்றும் 20-ம் தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடலின் தென்பகுதி மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
மேலும் அந்தமான் கடலின் பல பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LIVE 24 X 7