தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு, அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு, முதலில் 4 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ஆம் தேதியும், 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 4-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளி திறப்பைத் தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
இதையடுத்து, வெயில் நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையத்திடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் முதலமைச்சருடன் கலந்தாலோசித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வெயில் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கப்படும் தேதியைத் தமிழக அரசு மாற்றியமைத்துள்ளது. அதன்படி, 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 4-ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

LIVE 24 X 7