புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காகப் பிரிட்டன் தலைநகர் லண்டனுக்குச் சென்றுள்ள முதலமைச்சர் விஜய் முன்னிலையில், தமிழ்நாட்டில் தொழில்துறை விரிவாக்கம் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பல முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி மற்றும் தளவாட வசதி ஆகிய துறைகளில் தமிழகத்தில் ரூ.11,000 கோடி முதலீடு செய்வதற்காகச் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் தமிழ்நாடு வழிகாட்டுதல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப் மற்றும் சம்வர்தனா நிறுவனப் பிரிவுத் தலைவர் பேரி பெயின்டர் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த முதலீட்டின் மூலம் சுமார் 7,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
தமிழகத்தில் உலகளாவிய திறன் மையங்களை (GCC) நிறுவுவதற்கும் விரிவாக்கம் செய்வதற்கும் இரு முக்கிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 'GCC காரிடார்' பகுதியில், சுமார் ரூ.1,000 கோடி முதலீட்டில் 2,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திறன் மையம் அமைக்க ஏர்ன்ஸ்ட் & யங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல், ஸ்வீடனின் சிக்மா டெக்னாலஜி குரூப் நிறுவனம் தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் திருச்சி மற்றும் சென்னையில் உள்ள உலகளாவிய திறன் மையங்களை விரிவாக்கம் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்முறை டிஜிட்டல்மயமாக்கல் துறைகளில் மேற்கொள்ளப்படும் இந்த விரிவாக்கம் மூலம் 600 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.
மின்சாதன உற்பத்தித் துறையின் வளர்ச்சியை ஊக்கவிக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீட்டில் 'வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்' நிறுவனம் புதிய திட்டத்தைத் தொடங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்பட்டது. இந்த ஆலை அமைவதன் மூலம் 400 பேருக்குப் புதிய வேலைவாய்ப்பு உருவாகவுள்ளன.

LIVE 24 X 7