'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள்,முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய்யை மறைமுகமாக விமர்சிப்பது போல் இருப்பதாக இணையத்தில் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், விஜய் சேதுபதிக்கு ஆதரவாக அதிமுக களமிறங்கியுள்ளது.
விஜய் சேதுபதி சர்ச்சை
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் தற்போதைய சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த வார நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவரை நெறிப்படுத்திப் பேசிய அவர், தலைமைப் பண்பு என்றால் என்னவென்று தெரியாமல் வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்சினைகளும் பொறுப்புகளும் வரும்போது எதிரணி மீது பழியைப் போட்டு ஓடுவது தலைவருக்கான தகுதி இல்லை எனக் குறிப்பிட்டார்.
தவெகவினர் கண்டனம்
விஜய் சேதுபதியின் இந்த பேச்சு, மறைமுகமாகத் முதலமைச்சர் விஜய்யைச் சாடுவதாக இருப்பதாகக் கூறி, தவெகவினர் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
அதிமுக ஆதரவு
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள அதிமுக எம்.பி. இன்பதுரை, "நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துரிமையைப் பாதுகாக்க, அவருக்குச் சட்ட ரீதியாகத் துணை நிற்போம்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சமூக வலைதளத்தில் பெரு புறம் விஜய் சேதுபதியை விமர்சித்து வரும் நிலையில் மறுபுறம் ஆதரவு குரலும் எழுந்துள்ளது. அதாவது, முதலமைச்சர் விஜய் பெயரை விஜய் சேதுபதி ஒரு இடத்திலும் குறிப்பிடவில்லை என்றும் பிறகு ஏன் அவரது ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LIVE 24 X 7