கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் பெற்ற வெற்றிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளில், தமிழக முதலமைச்சர் விஜய் 3 வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் பின்னர் ராஜினாமா செய்தார். இந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியின் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அந்த மனுவில், தேர்தலில் போட்டியிடுவதற்காக விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் தவறான மற்றும் முரணான தகவல்கள் இடம்பெற்றிருந்ததாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். அதுபோல், பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோரின் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுவில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்த பின்னர், இதுகுறித்து முதலமைச்சர் விஜய் 3 வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதேபோல், வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற ஆதவ் அர்ஜுனா மற்றும் திருவண்ணாமலை தொகுதியில் வெற்றி பெற்ற திமுகவின் எ.வ. வேலு ஆகியோரின் வெற்றிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளிலும், அவர்கள் பதிலளிக்கக் கோரி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த பேரவைத் தேர்தல் தொடர்பாக இதுவரை 60-க்கும் மேற்பட்ட தேர்தல் வழக்கு மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LIVE 24 X 7