மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் தனது முதல்கட்டத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத்தை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த அவர், கரூர் சம்பவத்தை சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அப்போது அவர், "விஜய்யின் கரூர் தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது 40 பேர் பலியாகினர். அந்தச் சம்பவம் நடந்தவுடன் அங்கிருந்து ஓடியவர், சுமார் 70 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. தன் பிரசாரக் கூட்டத்திற்கு வந்து உயிரிழந்த அப்பாவிகளின் உடல்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தக்கூடத் தவெக தலைவர் வரவில்லை.
அச்சம்பவத்திற்குப் பிறகு கரூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தையே 15 நாட்கள் பூட்டிவிட்டுத் தலைமறைவாகி விட்டனர். 70 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராத ஒருவர் எவ்வாறு தமிழ்நாடு மக்களைக் காப்பாற்றுவார் என்று மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை தற்போது சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது. அசம்பாவிதத்திற்கு யார் காரணம் என்ற உண்மை விரைவில் வெளிவரும். விஜய் மீதான சிபிஐ விசாரணை இன்னும் நிறைவடையவில்லை; பொறுத்திருந்து பார்ப்போம். இந்த வழக்கின் தீர்ப்பு வரும்போது தமிழ்நாட்டில் தவெக என்றொரு கட்சி இருக்குமா, இருக்காதா என்பதே தெரியவரும்" எனக் குறிப்பிட்டார்.
மேலும் அவர், "வாக்களித்த மக்களுக்குத் துரோகம் செய்தவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். பணத்தாசையால் அதிமுகவிலிருந்து தவெகவிற்குச் சென்று போட்டியிடும் மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் டெபாசிட் இழக்க வேண்டும். அதிமுக எம்.எல்.ஏ-விடம் குதிரை பேரம் பேசி, ராஜினாமா செய்ய வைத்து 5 நிமிடங்களில் தவெகவில் இணைத்துள்ளனர். நாட்டில் எந்தவொரு கட்சியும் இத்தகைய இழிவான செயலைச் செய்தது இல்லை" என்று அவர் சாடினார்.

LIVE 24 X 7