சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) தொடர்பான மற்ற தேர்தல் ஆணையர்களின் ஆட்சேபனைகள் புறக்கணிக்கப்பட்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, பாஜக மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்தியாவில் வாக்குகள் திருடப்படுவதாகவும், இதன் மூலம் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் செல்லாததாகிவிடும் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, "பாஜக 30 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் என்றும், 400 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் அமித் ஷாவும் பிரதமர் மோடியும் எவ்வாறு இவ்வளவு உறுதியாகக் கூற முடிகிறது? மக்களாட்சியில் எந்தவொரு தலைவராலும் இப்படி உறுதியாகச் சொல்ல முடியாது.
ஹரியானா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வழக்கமாக இருக்கும் அரசுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு அலை (Anti-incumbency) திடீரென எப்படி மாயமாக மறைந்தது என்பது எங்களுக்கு நீண்ட நாட்களாகப் புரியாத புதிராக இருந்தது. அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அதுதான் 'வாக்குத் திருட்டு'" என்று சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், "அரசியலமைப்புச் சட்டத்திற்கான அதிகாரம் மக்களிடும் உள்ள வாக்கிலிருந்தே கிடைக்கிறது. அந்த அரசியலமைப்பில் இருந்தே நாட்டின் சட்டங்களும் அமைப்புகளும் உருவாக்கப்படுகின்றன.
ஆனால், வாக்களிக்கும் உரிமையே அழிக்கப்படும்போது, அரசியலமைப்பும் அதன் வலிமையை இழக்கிறது. சட்டவிரோதமான முறையில் வாக்குகள் திருடப்படும்போது, அந்த வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் இயற்றும் சட்டங்களும் சட்டவிரோதமானவை தான். வாக்கு திருட்டிலிருந்து சட்டத் திருட்டும், அதிலிருந்து நாட்டின் அமைப்புகளின் திருட்டும் நடைபெறுகிறது" எனத் தெரிவித்தார்.
2024 மக்களவைத் தேர்தலும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களும் முறைகேடாக நடத்தப்பட்டவை எனக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, "மற்ற இரு தேர்தல் ஆணையர்களும் ஞானேஷ் குமாருக்கு எதிராகக் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும். அவர் செய்திருப்பது இந்திய நாட்டிற்கு எதிரான செயல். அவர் தனது பதவியை உணர்ந்து அரசுத் தரப்புச் சாட்சியாக மாற வேண்டும். இந்திய ஜனநாயகத்தைச் சீரழிக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்; இதற்குப் பொறுப்பானவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவார்கள்" என எச்சரித்தார்.

LIVE 24 X 7