தவெக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் நாளை (ஆகஸ்ட் 14) நடைபெறவுள்ள மாநில தழுவிய ஆர்ப்பாட்டத்தைப் புறக்கணிக்கப்போவதாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருகின்றனர்.
முன்னதாக, எடப்பாடி பழனிசாமியின் அனுமதி பெறாமல் சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ-க்களின் பதவிகள் அதிமுக தலைமையால் பறிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகிய இருவரைத் தவிர மற்ற அனைவரும் தலைமைக்கு மன்னிப்புக் கடிதம் அளித்து, எடப்பாடி பழனிசாமியின் தலைமையைப் மீண்டும் ஏற்றுக்கொண்டனர். இதில் சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் அதிமுகவிலிருந்து விலகித் தவெகவில் இணைந்தனர். எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக்கொண்ட போதிலும், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கட்சித் தலைமையின் செயல்பாடுகளால் தொடர்ந்து அதிருப்தியிலேயே நீடித்து வந்தனர்.
இந்நிலையில், பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாதது மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பது ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, தவெக அரசைக் கண்டித்து நாளை (ஆகஸ்ட் 14) தமிழகத்தின் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னின்று நடத்துவதற்காகப் பல்வேறு மாவட்டங்களுக்குப் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். அதன்படி, தேனி மாவட்டப் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும், ராமநாதபுரம் மாவட்டப் பொறுப்பாளராக நத்தம் விஸ்வநாதனும், சேலம் மாவட்டப் பொறுப்பாளராகத் தங்கமணியும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், சொந்த மாவட்டத்தை விட்டுவிட்டு வேறு மாவட்டங்களுக்குச் சென்று ஆர்ப்பாட்டத்தை நடத்துமாறு கட்சித் தலைமை பிறப்பித்துள்ள உத்தரவை ஏற்க முடியாது என அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணியும், நத்தம் விஸ்வநாதனும் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.கழகத்தின் சார்பில் கர்நாடக அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாதுவில் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் அணை கட்ட தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதை கண்டித்தும், தமிழகத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தப்படி விவசாயிகள் பயிர்கடனை முழுமையாக ரத்து செய்யாமல் சில விதிமுறைகள் விதித்துள்ளதை கண்டித்தும், அ.தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நாங்கள் எங்கள் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.
-இருப்பினும், கழகப் பொதுச் செயலாளர் அவர்கள், வருவாய் மாவட்டங்களில் தலைமையேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்த அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் இராமநாதபுரம் மாவட்டம் -நத்தம் விஸ்வநாதன், தேனி மாவட்டம் -எஸ்.பி.வேலுமணி, சேலம் மாவட்டம் பி.தங்கமணி, ராணிப்பேட்டை மாவட்டம் – கே.பி.அன்பழகன் என அவரவர் சொந்த மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னின்று தலைமை ஏற்று நடத்துவதை தவிர்த்து, வேண்டுமென்றே வேறு மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, இது முற்றிலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை.
ஏற்கனவே, கருத்து வேறுபாடு காரணமாக கழக பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்ட அனைவருக்கும் அவரவர் வகித்த மாநில, மாவட்ட உள்ளிட்ட கழக பொறுப்புகளை மீண்டும் திரும்ப வழங்கப்படும் என கழக பொதுச் செயலாளர் அவர்கள் உறுதியளித்தார்கள்.
ஆனால் அதன்படி மீண்டும் கழக பொறுப்புகள் வழங்கப்படவில்லை, புதிய கழக பொறுப்புகளில் நியமனம் செய்து கழக பொதுச் செயலாளராகிய தாங்கள் வெளியிட்ட அறிவிப்பை, நாங்கள் யாரும் ஏற்றுக்கொள்ள இயலாது எங்களுக்கு நாங்கள் ஏற்கனவே, வகித்து வந்த கழக பதவிகள் திரும்ப வழங்க வேண்டும். என எழுத்து மூலம் எங்கள் நிலைபாட்டினை தங்களுக்கு தெரிவித்தும், அதற்கு தாங்கள் எந்த பதிலும் இல்லாமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகின்றீர்கள்.
இந்த சூழ்நிலையில் தாங்கள் தற்போது, கழகத்தின் சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று நடத்த எங்களது சொந்த மாவட்டத்தை விடுத்து, வேறு மாவட்டங்களுக்கு நியமித்து, அறிவிப்பை வெளியிட்டுள்ளீர்கள். மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாண்புமிகு புரட்சிதலைவி அம்மா ஆகியோர்களின் விசுவாசிகளை புறக்கணிக்கும் வகையில் இது போன்று அறிவிப்பு வெளியிடப்படுவதாக உள்ளது.
தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில், 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ரூ.75,000/- வரையிலான வங்கி கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் எனவும், ரூ.75,000/-க்குமேல் கடன் பெற்ற விவசாயிகளின் வங்கி கடனில் 50% அதாவது ரூ.35,000/- மட்டுமே தள்ளுபடி செய்ய த.வெ.க அரசின் அறிவிப்பு, ஏற்றுக்கொள்ளதக்கதல்ல, பாகுபாடின்றி அனைத்து விவசாயிகள் பயிர்கடனை தள்ளுபடி செய்ய த.வெ.க அரசு முன் வரவேண்டும்.
மேலும் கர்நாடகா, மேகதாதுவில் அணை கட்டும் பிரச்சனை மற்றும் காவிரியில் நமக்குரிய பங்கு நீரை பெற்றிடவும், அது மட்டுமின்றி, தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை காக்க மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், அம்மா ஆகியோர்களின் வழியில் அ.தி.மு.க எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் என்றென்றும் ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்போம். இதில் மாறுபட்ட கருத்து வேறுபாடு வேறு எதுவுமில்லை.
எனவே, .அ.தி.மு.க சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நங்கள் முழு ஆதரவு அளிக்கின்றோம். வேறு மாவட்டங்களில் சென்று கலந்து கொள்ள இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தங்களுக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் பொறுப்புகள் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்து வரும் இவர்கள், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகிகள் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில், கட்சித் தலைமையின் உத்தரவை அவர்கள் வெளிப்படையாக மறுத்து ஆர்ப்பாட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்திருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LIVE 24 X 7