சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் புதிய ஹேர்ஸ்டைல் மற்றும் தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் சிலர் விமர்சித்து வரும் நிலையில், அதற்கு மேயர் பிரியா தனது எக்ஸ் பக்கத்தில் காரசாரமான பதிவொன்றை வெளியிட்டுப் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை மேயர் பிரியா நேற்று (செப்.26) நடைபெற்ற மாமன்றக் கூட்டத்திற்கு வழக்கம் போல இல்லாமல், சற்றுப் புதிய ஹேர்ஸ்டைலில் வித்தியாசமான தோற்றத்தில் வந்திருந்தார். அவரின் இந்த புதிய லுக் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின. அதில் சிலர் அவரது புதிய தோற்றத்தைப் பாராட்டிய போதிலும், சிலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
ஏற்கனவே, சமூக வலைதளங்களில் தன் மீது அவதூறு பரப்பப்படுவதாகச் சென்னை காவல் ஆணையரிடம் மேயர் புகார் அளித்திருந்த சூழலில், தற்போது எழுந்துள்ள இந்த ஹேர்ஸ்டைல் விமர்சனம் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
தன் மீதான தொடர் விமர்சனங்கள் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மேயர் பிரியா, "ஏன் எப்போதும் என்னைச் சுற்றியே இதுபோன்ற பிரச்சினைகள் உருவாகின்றன எனப் புரியவில்லை. நான் செய்யும் மிகச் சாதாரணமான விஷயங்கள் கூடச் சர்ச்சையாக்கப்படுகின்றன. நான் ஒரு பர்கர் சாப்பிட்டாலும் பிரச்சினை; முடியை வெட்டினாலும் பிரச்சினை. நான் எடுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட முடிவும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு விமர்சிக்கப்படுகிறது" என வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "இதற்குக் காரணம் நான் ஒரு பெண் என்பதாலா? அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதாலா? என்று சில நேரங்களில் யோசிப்பதுண்டு. பெண்களின் உரிமைகளுக்காகப் பேசும் பெண்ணியவாதிகள் இதுபோன்ற நேரங்களில் எங்கே போகிறார்கள் என்றே தெரியவில்லை.
அரசியலில் இருக்கும் பெண்கள் யாரும் ஒழுக்கமற்றவர்கள் அல்ல; அவர்கள் யாருக்கும் குறைவான மரியாதைக்குரியவர்களும் அல்ல. பொது வாழ்க்கையில் இருக்கும் ஒரு பெண்ணின் தோற்றம், வாழ்க்கை முறை அல்லது தனிப்பட்ட விருப்பங்களை வைத்து அவரைத் தீர்ப்பளிக்க யாருக்கும் உரிமையில்லை.
ஒவ்வொரு பெண்ணுக்கும் கண்ணியமும் சுயமரியாதையும் உண்டு. தனது வாழ்க்கையைத் தன் விருப்பப்படி வாழும் உரிமையும் அவருக்கு இருக்கிறது. மேயர் என்ற பதவிக்கு அப்பாற்பட்டு, ஒரு பெண்ணையும் அவரது கண்ணியத்தையும் மதிக்க வேண்டும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Why is it always me?
— Priya (@PriyarajanDMK) September 26, 2026
Whatever I do seems to become a controversy. From day one until today, even the simplest things become an issue. If I eat a burger, it’s an issue. If I cut my hair, it’s an issue. Every personal choice I make seems to be questioned and judged.
Sometimes I…
LIVE 24 X 7