அரசியல்

108 தொகுதிகளில் வெற்றி.. தேர்தலில் திமுகவை விட தவெக செய்த செலவு எவ்வளவு?

2026 சட்டப்பேரவைத் தேர்தலின் போது தவெக மேற்கொண்ட செலவினங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை விவரங்களைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

108 தொகுதிகளில் வெற்றி.. தேர்தலில் திமுகவை விட தவெக செய்த செலவு எவ்வளவு?
TVK
2026 சட்டப்பேரவைத் தேர்தலின் போது அரசியல் கட்சிகள் மேற்கொண்ட செலவினங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை விவரங்களைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழக வெற்றிக்கழகம் மொத்தமாக ரூ.19.8 கோடி செலவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் வாக்குப்பதிவு முடியும் வரையிலான வரவு-செலவு கணக்குகளை அனைத்துக் கட்சிகளும் தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில், திமுக ரூ.197.84 கோடியும், அதிமுக ரூ.112 கோடியும் செலவிட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சித் தரப்பில், தேர்தல் காலத்தில் கிடைத்த ரூ.2.20 கோடி வருவாயில், பிரசாரம், பயணங்கள் மற்றும் விளம்பரங்கள் என மொத்தம் ரூ.1.37 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் செலவினத்தோடு ஒப்பிடுகையில் பத்தில் ஒரு பங்கு தொகையை, அதாவது ரூ.19.8 கோடியை மட்டுமே தவெக செலவிட்டுள்ளது. தவெகவின் முக்கியச் செலவின விவரங்கள்:

ஊடக விளம்பரங்கள்: செய்தித் தாள்கள், டிஜிட்டல் மீடியா மற்றும் வானொலி விளம்பரங்களுக்காக அதிகபட்சமாக ரூ.26.35 கோடி உட்படப் பொதுப் பிரசாரச் செலவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விளம்பரம் மற்றும் பிரசாரப் பொருட்கள்: விளம்பரங்களுக்கு ரூ.6.34 கோடியும், பிரசாரப் பொருட்களுக்கு ரூ.40.54 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது.

பயணம் மற்றும் பொதுக்கூட்டம்: கட்சியின் தலைவர் விஜய்யின் விமானப் பயணத்திற்கு ரூ.3.54 கோடியும், பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கு ரூ.2.06 கோடியும் செலவாகியுள்ளது.

தொகுதிச் செலவுகள்: விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் தலா ரூ.40 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்கள் வாயிலான ஆன்லைன் பிரசாரங்களுக்கு தனியாக நிதி எதுவும் செலவழிக்கப்படவில்லை என்பது அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட சமயத்தில் தவெகவின் தொடக்கக் கையிருப்பாக ரூ.3.03 கோடி இருந்தது. தேர்தல் காலத்தில் பல்வேறு வழிகள் மூலமாக ரூ.7.02 கோடி நிதி வரவாகக் கிடைத்துள்ளது.

இத்தேர்தலில் 233 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக்கழகம், 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் போட்டியிட்ட இரு தொகுதிகளிலுமே அக்கட்சியின் தலைவர் விஜய் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.