அரசியல்

தொகுதி மறுவரை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்: மத்திய அரசுக்கு விஜய் செக் வைப்பாரா?

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று தொகுதி மறுவரையரை எதிர்த்தும், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 33 சதவீத இடஒதுக்கீட்டை சீக்கிரம் நிறைவேற்றுதல் போன்ற மத்திய அரசிற்கு எதிரான தீர்மானங்களை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொகுதி மறுவரை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்: மத்திய அரசுக்கு விஜய் செக் வைப்பாரா?
Vijay passes Resolution
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று தொகுதி மறுவரையரை எதிர்த்தும், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 33 சதவீத இடஒதுக்கீட்டை சீக்கிரம் நிறைவேற்றுதல் போன்ற மத்திய அரசிற்கு எதிரான தீர்மானங்களை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையரை எதிர்ப்பு தீர்மானம் மற்றும் 33 % பெண்கள் இடஒதுக்கீடு தீர்மானம் என இரண்டு தீர்மானங்களை முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் முன்மொழிந்தார்.

அதில் முதலாவதாக தொகுதி மறுவரைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்த அவர்,
"தற்போது அறிமுகம் செய்யப்பட உள்ள மசோதா 50% இடஒதுக்கீடு அடிப்படையில் இடங்களை உயர்த்தினாலும், 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுக்குப் பின் நடைபெறும் தொகுதி மறுவரையறையில் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்றும்,

நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும். எனவும்,

தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக்கிடையே அதாவது விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும்" என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.

அதன்பின், 33 சதவீத பெண்களுக்கான இடஒதுக்கீடு தீர்மானத்தை முன்மொழிந்த அவர்,
"தனக்கு இதுவரை கிடைத்த இடங்களுக்கும், தற்போது கிடைத்திருக்கும் இடத்திற்கும் தனது பாட்டி, அம்மா, அக்கா மற்றும் தங்கைகளே மிகப்பெரிய காரணம். தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் ஓட்டு போட்டுள்ளார்கள்.எனவும்,

பெண்கள் உயர்ந்தால் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்துக்கு பெருமை. பெண்களுக்கு இட ஒதுக்கீடு தருவது சலுகை அல்ல; சமூக நீதி அரசியல் அமைப்பு சார்ந்தது. பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் தமிழக வெற்றிக் கழக அரசு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. உள்ளாட்சி 50 சதவீத இட ஒதுக்கீட்டால் அதிகாரத்தில் பெண்கள் உள்ளனர். எனவும்,

அதனால், பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது சலுகை அல்ல; அது ஒரு சமூக நீதி சார்ந்தது. மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டை இனியும் தாமதிக்காமல் செயல்படுத்த வேண்டும்." என்றும் முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.

அதன்பின் இறுதியாக, "பெண்களுக்கான இடஒதுக்கீட்டு தீர்மானத்தை ஆதரிக்கும் கட்சிகள் அனைத்தும் அதைப்போலவே தொகுதி மறுவரை எதிர்ப்புக்கும் ஆதரவு தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன், இல்லையெனில் தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்து கட்சி எம்.பி.க்கள் ஆலோசனைக்கு பிறகு தான் தொகுதி மறுவரையறை தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

இவ்விரு தீர்மானங்களையும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும். இது ஒரு அரசியல் கட்சியின் தீர்மானம் மட்டும் அல்ல.என்பதை நினைவில் கொள்ளவேண்டும்." என்றும் முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.

இந்த தீர்மானங்களில் முதலமைச்சர் விஜய் கூறியது போல 33 சதவீத இடஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் சீக்கிரம் நிறைவேற்றப்படவேண்டும் என்ற தீர்மானம் அணைத்து கட்சியினராலும் ஒருமனதுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில்,

எதிர்பார்ததுப் போல், தொகுதி மறுவரையரைக்கு எதிரான தீர்மானத்துக்கு NDA கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் இந்த தீர்மானத்துக்குகான எதிர்ப்பை சட்டப்பேரவையில் தெரிவித்தனர்.

இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, ஐயுஎம்எல் போன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் ஆதரவையும், திமுக மற்றும் மஜக போன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் வரவேற்பதாகவும் தெரிவித்தனர்.

ஆனால், இந்த தீர்மானத்துக்கு எதிராக NDA கூட்டணி கட்சிகளான அதிமுக மற்றும் பாமக என இரண்டு கட்சிகளும், பாஜக-வுடன் சேர்த்து மூன்று கட்சிகளின் உறுப்பினர்களும் தங்களது எதிர்ப்பை சட்டப்பேரவையில் தெரிவித்தனர்.

இறுதியில், 33 சதவீத இடஒதுக்கீட்டிற்கான தீர்மானத்துக்கு அனைவரும் ஆதரவளித்ததால் அந்த தீர்மானம் எதிர்ப்பின்றி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், தொகுதி மறுவரைக்கான எதிர்ப்பு தீர்மானத்துக்கு எதிர்ப்புகள் இருந்திருந்தாலும், ஆதரவளிப்போர் எண்ணிக்கை அதிகம் என்ற கணக்கில் தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.