தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து அ.தி.மு.க-வில் நீடித்து வரும் உள்கட்சிப் பிளவின் அடுத்தகட்டமாக, அக்கட்சியின் மூத்த தலைவரும் அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான இசக்கி சுப்பையா இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி தரப்பு மற்றும் சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்பு என இரண்டாக உடைந்தது. சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது இ.பி.எஸ்-ஸை எதிர்த்து, சி.வி. சண்முகம் தரப்பைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்தனர்.
நேற்று (மே 25) எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்த நிலையில், இன்று அம்பாசமுத்திரம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ இசக்கி சுப்பையாவும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்துத் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்து பதவி விலகியுள்ளதைத் தொடர்ந்து, தமிழகச் சட்டமன்றத்தில் அ.தி.மு.க-வின் தற்போதைய எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 43 ஆகக் குறைந்துள்ளது.
இசக்கி சுப்பையாவின் அரசியல் பின்னணி
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் இசக்கி சுப்பையா வெற்றி பெற்றிருந்தார். கடந்த 2011, 2021 மற்றும் இந்த 2026 தேர்தலிலும் அ.தி.மு.க சார்பில் தொடர்ந்து இதே தொகுதியில் வென்ற இவர், 2011-ல் ஜெயலலிதா அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ராஜினாமா செய்துள்ள இசக்கி சுப்பையாவும் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

LIVE 24 X 7