கரூரில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். திருச்சி விமான நிலையத்திலிருந்து கார் மூலம் கரூர் வந்தடைந்த அவருக்கு, வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காவல்துறை எங்களை எச்சரிக்காதது ஏன்?
அட்லஸ் அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், "என் வாழ்க்கையில் எவ்வளவோ வலிகளைத் தாண்டி வந்திருந்தாலும், கரூர் சம்பவமே எனக்கு மிக அதிக மனவலியைத் தந்தது. இதில் என் அக்கா, தங்கைகளையும் கள்ளங்கபடமற்ற குழந்தைகளையும் இழந்தேன். என்னை ஓடி ஒளிந்துவிட்டதாக ஏளனம் பேசினார்கள். ஆனால் எனக்கு எப்போதும் பணத்தை விட ஜனம்தான் முக்கியம்.
தொடர்ந்து பேசிய அவர், கரூர் சம்பவத்தின் போது காவல்துறையின் செயல்பாடுகள் குறித்துக் கேள்விகளை எழுப்பினார். "நாமக்கல்லில் இருந்து வரும்போதே காவல்துறை எங்களை எச்சரிக்காதது ஏன்? நெடுஞ்சாலையிலிருந்து சம்பவ இடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றதே போலீஸ்தான். கரூர் காவலர்களை நான் முழுமையாக நம்பினேன், ஆனால் அவர்களுக்கு அப்போது பின்னணியில் இருந்து அறிவுறுத்தல்களையும் அழுத்தங்களையும் கொடுத்தது யார் என்பது எனக்குத் தெரியும். இந்த வலிகளைக் கொடுத்தவர்களுக்கு மக்கள் தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள்" என்றார். மேலும், கரூரில் உயிரிழந்தவர்களின் நினைவாக அங்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
ஊழல் ஒழிப்பும் புதிய திட்டங்களும்
மேலும், "சென்னையில் பாலம் கட்டுவதற்காக முந்தைய ஆட்சியில் அதிக செலவுக்கு எடுக்கப்பட்ட டெண்டர்களை எங்கள் அரசு ரத்து செய்துள்ளது. லஞ்சம், ஊழலை ஒழிக்க முடியாது என்று சொன்னார்கள்; ஆனால் இன்று அரசு அலுவலகங்களில் லஞ்சம் இன்றி வேலைகள் வேகமாக நடக்கின்றன. மக்கள் மரியாதையாக நடத்தப்படுகிறார்கள்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, எல் அண்ட் டி நிறுவனத்துடனான புதிய ஒப்பந்தம் மற்றும் விவசாயிகளுக்கான குறுவை சாகுபடித் திட்டம் குறித்துக் குறிப்பிட்ட அவர், வருகிற அண்ணா பிறந்தநாளில் இல்லத்தரசிகளுக்காக 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' என்ற புதிய திட்டம் அறிவிக்கப்படும் என்றும், இந்த விஜய் 'ரீல்' தாய்மாமன் அல்ல, 'ரியல்' தாய்மாமன் என்றும் பேசினார்.
மேக்கேதாட்டு மற்றும் தொகுதி மறுவரையறை
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த முதலமைச்சர், "முந்தைய ஆட்சியில் மேக்கேதாட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சரியாக வாதாடவில்லை என்று எங்களால் கேள்வி எழுப்ப முடியும். சவால் விடுவதோ, பழிப்போடுவதோ எங்கள் அரசியல் அல்ல; குறைவாகப் பேசி, அதிகமாக வேலை செய்வதுதான் எனது கொள்கை" என்று விளக்கமளித்தார்.
மேலும், மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் தொகுதி மறுவரையறை குறித்துப் பேசுகையில், "தமிழ்நாடு எவ்வித தொகுதி மறுவரையறையையும் ஏற்றுக்கொள்ளாது. நமக்கான இடத்தை யாரும் பறிக்க முடியாது, அதற்கு நாமும் அனுமதிக்க மாட்டோம்" என்று திட்டவட்டமாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் வேறு வேறெல்லாம் கிடையாது. கூட்டுக் களவானிகள்' என்று சாடிய அவர், அவர்களுக்குள் ஒட்டும் உறவும் இல்லை என்பதை வரவிருக்கும் இடைத்தேர்தலில் நிரூபித்துக் காட்டுமாறு சவால் விடுத்தார்.

LIVE 24 X 7