தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி கட்டப் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில், தனது சொந்த மாவட்டமான சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடிப் பேசினார்.
சேலத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்தத் தேர்தல் ஒரு குடும்பத்திற்கும் தமிழக மக்களுக்கும் இடையிலான போர் என கூறினார். கருணாநிதி குடும்பத்தின் வாரிசு அரசியலுக்கு மக்கள் இந்தத் தேர்தலில் மூடுவிழா நடத்துவார்கள் என்றும், திமுக 20 இடங்களைப் பெறுவதே ஆச்சரியம் தான் என்றும் அவர் விமர்சித்தார். அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கிட்னி முறைகேடு மற்றும் போதைப்பொருள் புகார்
திமுக ஆட்சியில் மனிதாபிமானம் அற்ற முறையில் உடல் உறுப்புகள் திருடப்படுவதாக எடப்பாடி பழனிசாமி பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். திமுக எம்.எல்.ஏ. ஒருவரின் மருத்துவமனையில் கிட்னி திருடப்பட்டதாகவும், குமாரபாளையத்தில் ஒரு பெண்மணிக்கு கிட்னிக்குப் பதிலாகக் கல்லீரல் எடுக்கப்பட்டதாகவும் அவர் சாடினார். மேலும், அதிமுக ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் தமிழகத்தில் போதைப்பொருள் முற்றிலும் ஒழிக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
அதிமுகவின் அதிரடி தேர்தல் வாக்குறுதிகள்
மின் கட்டண உயர்வு மற்றும் வரிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என அவர் அறிவித்தார். மேலும், மக்களின் துன்பத்தைக் களைய உதவித்தொகையாக ரூ.10,000 வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். சேலம் மாவட்டத்தின் 11 தொகுதிகளிலும் அதிமுகவை 100% வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

LIVE 24 X 7