மதுரையில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா இன்று நடைபெற்றது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் குடமுழுக்கு விழா நடைபெறவதால் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் குவிந்ததால் மதுரையே திருவிழா கோலமாக காட்சியளிக்கிறது.
திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு செப்டம்பர் 11 முதல் 17-ஆம் தேதி வரை 12 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேகத்திற்காக வடக்கு ஆடி வீதியில் 184 யாக குண்டங்கள் மற்றும் 56 யாகசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அம்மனுக்கு 33 யாக குண்டங்களும், சுவாமிக்கு 33 யாக குண்டங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
புனித நீர் கலசங்களில் நிரப்புவதற்காக புண்ணிய நதியான கங்கையிலிருந்து 1,008 லிட்டர் புனித நீரும், மேலும் 7 புண்ணிய நதிகளிலிருந்து 1,008 லிட்டர் புனித நீரும் கொண்டு வரப்பட்டிருந்தது. 9 வகையான தானியங்கள், மூலிகைப் பொடிகள், ஆலங்குச்சி, அரசங்குச்சி, பசுநெய் உள்ளிட்ட 96 வகையான ஹோமப் பொருட்களைக் கொண்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. யாகசாலை பூஜைகள் மற்றும் திருக்குட நன்னீராட்டு விழாவில் 300-க்கும் மேற்பட்ட பட்டர்கள் பங்கேற்று பூஜைகளை முன்னின்று நடத்தினர்.
இன்று காலை 7.40 மணிக்கு அருள்மிகு மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கு சமகால திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து காலை 7.55 மணிக்கு மூலவர் மீனாட்சி அம்மனுக்கும், காலை 8.10 மணிக்கு மூலவர் சுந்தரேஸ்வரருக்கும் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.
திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் 5 லட்சம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோவில் முழுவதும் வாழை மரங்கள் மற்றும் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. திருக்கோவில் வளாகம், கோபுரங்கள், விமானங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வண்ண விளக்குகள் மற்றும் லேசர் மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
கோவில் மேற்கூரையில் நின்று திருக்குட நன்னீராட்டு விழாவை காண்பதற்காக 9,000 பேருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள் மற்றும் மாசி வீதிகளில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
பொதுமக்கள் அதிகம் கூடும் சித்திரை வீதி, ஆவணி மூல வீதி மற்றும் மாசி வீதிகளில் 26 இடங்களில் தலா 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், 40 இடங்களில் நிரந்தர மற்றும் தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டிருந்தன.
திருக்கோவில் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் 27 இடங்களில் 54 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. 70 மருத்துவர்கள், 150 மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட 275 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.
மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் 60 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு அவசரகால மருத்துவப் பிரிவு அமைக்கப்பட்டிருந்தது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என 24 அவசர ஊர்திகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.
பாதுகாப்பு பணிகளை கண்காணிக்க 433 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் 70 அதிநவீன FRS கேமராக்கள் மூலம் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்றன. மதுரை மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் 6,500 காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், 40 குற்றத்தடுப்பு காவலர் குழுவினர் கோவிலைச் சுற்றிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கூட்ட நெரிசலில் குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்கும் வகையில், குழந்தைகளின் கைகளில் கண்காணிப்பு பட்டைகள் அணிவிக்க 10 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பொதுமக்களுக்கு உதவிட கோவிலைச் சுற்றிலும் 10 இடங்களில் காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டிருந்தன.
C2 ரவுண்டானா, எல்லீஸ் நகர், TB ரோடு, வெஸ்டர்ன் பார்க் ஹோட்டல் உள்ளிட்ட 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மதுரையின் 51 முக்கிய சந்திப்புகளில் LED திரைகள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக 55 இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னை, நெல்லை, போடி உள்ளிட்ட ஊர்களில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
தமிழ்நாடு முழுவதும் இருந்து மதுரைக்கு 300-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளும், மதுரை மாநகரப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.
திருக்குட நன்னீராட்டு விழா நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இன்று காலை 10 மணி முதல் பொதுமக்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.

LIVE 24 X 7