தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வரும் நிலையில், அவையில் 110-விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் முக்கியப் புதிய திட்டங்களை அறிவித்தார்.
புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம்
அடுத்த 100 ஆண்டுகால நிர்வாகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகரில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம் கட்டப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
அனைத்து அரசுத் துறைகளையும் ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைக்கும் வகையில் அமையவுள்ள இந்த நவீன நிர்வாக வளாகம், பசுமைக் கட்டடத் தரநிலைகளுக்கு ஏற்ப உருவாக்கப்படும். இதில் போதுமான வாகன நிறுத்துமிடங்கள், நவீன மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள், தீயணைப்பு பாதுகாப்பு வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்றுவர ஏற்ற கட்டமைப்புகள் இடம்பெறும்.
'தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்'
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் சர்வதேசத் தரத்திலான 'தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்' (Tamil Nadu Olympic City) அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மைதானங்கள், அதிநவீன உபகரணங்கள், உயர்தரச் செயல்திறன் பயிற்சி மையம், விளையாட்டு மருத்துவ மையங்கள் மற்றும் வீரர்களுக்கான தங்குமிட வசதிகள் ஏற்படுத்தப்படும். தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பெருமளவில் பதக்கங்களை வெல்லும் வகையில் திறமையாளர்களை உருவாக்கும் மையமாக இது செயல்படும்.
'மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்'
விளையாட்டுத் துறையை மேலும் ஊக்குவிக்கும் வகையில், மாநிலத்தில் புதிய 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்' (Motor Sports City) உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். Formula 1, Formula 2, Formula 3, Formula 4 உள்ளிட்ட பன்னாட்டுப் பந்தயங்களை நடத்தும் வகையில் சர்வதேசத் தரத்திலான பந்தயத்தடமும் பயிற்சி வசதிகளும் இங்கு அமைக்கப்படவுள்ளன.
இத்திட்டம் மூலம் இளைஞர்களின் வாகனப் பந்தயத் திறமைகள் கண்டறியப்பட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும். மேலும், இத்தகைய சர்வதேச மைதானங்கள் அமைவது சுற்றுலாத் துறை, சிறப்பு வாகன உற்பத்திச் துறை, வேலைவாய்ப்பு மற்றும் மாநிலப் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

LIVE 24 X 7