K U M U D A M   N E W S

பாடகர் மனோ மகன்களுக்கு முன்ஜாமின்..

இரு தரப்பினர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இருவரை தாக்கியதாக பாடகர் மனோவின் மகன்கள் ஜாகிர், ரபீக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருவரும் 30 நாட்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது.  

ரஷித் கான் சுழலில் சிக்கிய தென்னாப்பிரிக்கா.. ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை!

9 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட் வீழ்த்திய ரஷித் கான் ஆட்டநாயகன் விருது வென்றார். நேற்று அவருக்கு பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நங்கெயாலியா கரோட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

ம.நீ.ம. பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

சென்னை வேளச்சேரி அதிமுக பகுதி செயலாளர் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான மாம்பலம், திருவல்லிக்கேணி,கோவை ஆகிய ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

3 ரவுண்டு போலீஸ் துப்பாக்கி சூடு.. பிரபல ரவுடி ஆல்வின் மீது குண்டு பாய்ந்து படுகாயம்

பிரபல ரவுடி ஆல்வின் மீது போலீசார் துப்பாக்கியால் 3 ரவுண்டுகள் சுட்டதில், இரு கால்களிலும் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சிக்கும் முன்னாள் அமைச்சர்கள்.. வைத்திலிங்கம் மீது பாய்ந்தது லஞ்ச வழக்கு

27.90 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றது தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

திருப்பதி லட்டு தயாரிக்க அனுப்பிய நெய் கலப்படமா.. ? - ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் சோதனை

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.55,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.98.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது

'பக்தர்களின் மனது காயம்பட்டுள்ளது’.. ராகுல் காந்தி வேதனை!

இந்த ஆய்வறிக்கை உண்மை என்றால் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த விவகாரம் குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது

பேருந்து கவிழ்ந்து விபத்து.. ஒருவர் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பைபாஸ் சாலை வளைவில் அரசு சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு காலதாமதம்... காரணம் என்ன?

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வரிசையில் நின்று மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு

நடிகை பார்வதி நாயர் மீது சென்னை தேனாம்பேட்டை போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். உதவியாளரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

#JUSTIN : தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்தனர்.

#JUSTIN : கோவையில் ரவுடி மீது துப்பாக்கிச்சூடு.. என்ன காரணம்?

பிரபல ரவுடி ஆல்வின் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் தற்போது வெளியே வந்துள்ளது.

#TVK Maanadu: எதிர்பாராத நேரத்தில் வந்த விஜய் அறிவிப்பு .. ஆடிப்போன அரசியல் களம்

வெற்றிக் கொடி கட்டுமா  நடிகர் விஜய்யின் த.வெ.க மாநாடு என்னும் கேள்வி எழுந்துள்ளது.

ரூ.5,000 குறைத்த தயாரிப்பாளர்.. ஆட்டோ ஓட்டுநருக்கு வழங்கிய வைரமுத்து.. நெகிழ்ச்சி!

‘நான் ஆட்டோக்காரன்.. நான் ஆட்டோக்காரன்..' பாடல் இன்றும் ஆயுத பூஜை பண்டிகையின் பிரதான பாடலாக ஆட்டோ ஓட்டுநர்களால் கொண்டாடப்படுகிறது. ‘ரா ரா ரா ராமையா..’ பாடலில் ஒரு மனிதனின் வாழ்க்கையை அப்படியே அழகாக அடுக்கியிருபார் இருப்பார் கவிப்பேரரசு. இது தவிர, ‘தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு..’ என்ற பாடலில் வார்த்தையில் புகுந்து விளையாடி இருப்பார்.

#BREAKING : முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உட்பட 11 நபர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

IND vs BAN Test : கொட்டும் மழையிலும் டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர்கள் குவிந்தனர்.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 21-09-2024 | Mavatta Seithigal

மாவட்ட செய்திகள் மற்றும் உள்ளூர் செய்திகள் குறித்த முழு தொகுப்பினை இங்கே காணலாம்.

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.. குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பு!

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டது குவாட் அமைப்பு. இன்று நடக்கும் குவாட் மாநாட்டுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமை தாங்குகிறார்.

தமிழில் கேளுங்க எனக்கு புரியும்! - Nose Cut செய்த ராணா!!

தமிழில் கேள்வி கேட்டால் தனக்கு புரியும் என்று ராணா டகுபதி தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சிக்கும் ஒரே தேர்தல் நடத்தப்படுமா? - சீமான்

ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் உள்ளாட்சிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுமா என்று சீமான் கேள்வி

விரைவுச் செய்திகள் | 21-09-2024 | Tamil News | Today News

அன்றாட நிகழ்வுகள் குறித்த முக்கிய செய்தி தொகுப்பினை இங்கே காணலாம்.

"அமைச்சரவையில் இலாக்கா மாற்றம்.." - அமைச்சர் அதிரடி பேச்சு

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் எப்போது வழங்கப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன் நழுவிச் சென்றார்.

தமிழில் பெரிய நடிகர்களுடன் மட்டுமே நடிப்பது ஏன்? - மஞ்சு வாரியர் சொன்ன பதில்

தமிழில் பெரிய நடிகர்களுடன் மட்டுமே நடிப்பது ஏன் என்று நடிகை மஞ்சு வாரியர் பதிலளித்துள்ளார்.