K U M U D A M   N E W S

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு இழைக்கப்படும் அவமரியாதை... இதுவா திராவிட மாடல் சமூகநீதி? ராமதாஸ் கேள்வி

அனைத்து சாதி அர்ச்சகர்களை அவமரியாதை செய்துள்ள திமுக அரசு, பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு குற்றம்சாட்டியுள்ளார்.

Tirupati Laddu Issue : லட்டு நெய் வாகனங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு

Tirupati Laddu Issue : திருப்பதி கோயிலுக்கு கொண்டு செல்லப்படும் நந்தினி நெய் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி, மின்சார பூட்டுகளை பயன்படுத்த கர்நாடகா பால் கூட்டமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LIVE : Delhi CM Atishi Marlena Oath Ceremony : டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி

LIVE : Delhi CM Atishi Marlena Oath Ceremony Live Update in Tamil : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததை அடுத்து புதிய முதல்வராக அதிஷி பதவியேற்றார். இவருக்கு துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

13 வயது மாணவியிடம் சில்மிஷம்.. முதியவரின் கொடூர செயல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 13 வயது பள்ளி மாணவி சின்னகண்ணு என்பவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சின்னகண்ணு கைது செய்யப்பட்டார்.

ரவுடி மீது துப்பாக்கிச்சூடு.. கோவை ஆணையர் விளக்கம்

கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டது தொடர்பாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

Saripodhaa Sanivaaram : மாஸ் காட்டியதா நானி, SJ சூர்யா கூட்டணி..? சரிபோதா சனிவாரம் ஓடிடி வெளியீடு தேதி!

Saripodhaa Sanivaaram OTT Release Date : தெலுங்கில் நானி, எஸ்ஜே சூர்யா, பிரியங்கா மோகன் நடித்த சரிபோதா சனிவாரம் (Saripodhaa Sanivaaram) திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸானது. ரசிகர்களிடம் கவலையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

லட்டு விவகாரம்... திருப்பதி தேவஸ்தானம் அவசர ஆலோசனை

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தேவஸ்தான முக்கிய நிர்வாகிகள், செயல் அதிகாரி உள்ளிட்டோருக்கு திருப்பதி தேவஸ்தானம் அழைப்பு விடுத்துள்ளது.

#BREAKING கொடைக்கானல் அருகே நிலத்தில் திடீர் விரிசல்... மக்கள் பீதி

கொடைக்கானல் அருகே கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் 300 அடி நீளத்திற்கு நிலம் தனியாக பிளந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். கடந்த சில நாட்களாக குழாயில் நீர் வராததால், சென்று பார்த்தபோது பூமி விரிசல் விட்டிருப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். 

Jayam Ravi: ”வாழு வாழ விடு... தனிப்பட்ட விஷயத்தில் யாரையும் இழுக்காதீங்க..” உண்மையை சொன்ன ஜெயம் ரவி!

Actor Jayam Ravi About Aarti Divorce at Brother Audio Launch : ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வது குறித்து மனம் திறந்தார்.

Madurai : பவுடர் பால் குடித்த குழந்தை உயிரிழப்பு - மதுரையில் நேர்ந்த சோகம்

Madurai Child Death : மதுரையில் பால் பவுடர் குடித்த 2 மாத குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனை அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kamal Hassan: “இதற்காக தான் அரசியலுக்கு வந்தேன்... 2026 தேர்தல் தான் இலக்கு..” மனம் திறந்த கமல்ஹாசன்!

Kamal Hassan Speech at Makkal Needhi Maiam General Meeting : சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் அக்கட்சியின் 2வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தொண்டர்கள் முன் உரையாற்றினார் கமல்ஹாசன்.

Northeast Monsoon : நெருங்கும் வடகிழக்கு பருவமழை... ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

Northeast Monsoon : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடத்தினார் 

Siruvani River Dam : கேரள அரசின் விண்ணப்பத்தை மத்திய அரசு ஏற்க மறுப்பு

Siruvani River Dam : சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட முயற்சித்து வந்த நிலையில் கேரள அரசின் சுற்றுச் சூழல் அனுமதிக்கான விண்ணப்பத்தை மத்திய சுற்றுச் சூழல் துறை திருப்பி அனுப்பியது. 

4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை... சென்னையில் எப்படி?

Heavy Rain in Tamil Nadu : 23ம் தேதி மற்றும் 24ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Ponneri Railway Station : திருவள்ளூரில் ரயிலை கவிழ்க்க சதி..?

Ponneri Railway Station : திருவள்ளூர் பொன்னேரியில் தண்டவாளத்தில் உள்ள ரயில்வே சிக்னல் பெட்டியின் போல்டுகள் கழற்றப்பட்டதால் ரயிலை கவிழ்க்க சதியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

வைகோ வீட்டில் திருமணம்.. முதல்வருக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்த துரை வைகோ!

Durai Vaiko Dughter Wedding Invitation To CM Stalin : இயக்கத் தந்தை தலைவர் வைகோவின் உடல் நலன் குறித்து முதல்வர் அவர்கள் மிகுந்த அக்கறையுடன் கேட்டு அறிந்தார். அண்மையில் அமெரிக்கா சென்று வந்த முதல்வர் அண்ணன் தளபதியின் பயணம் வெற்றிகரமாக அமைந்தது குறித்து அவரிடம் எனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன்

Kamal Haasan : பாஜகவிற்கு கமல்ஹாசன் எதிர்ப்பு.. ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தீர்மானம்

Kamal Haasan Speech At Makkal Needhi Maiam General Meeting : மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழுவில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

LIVE: Kamal Haasan Speech : ம.நீ.ம. பொதுக்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு

Kamal Haasan Speech at Makkal Needhi Maiam General Meeting : மக்கள் நீதி மய்ய கட்சி பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் உரையாற்றி வருகிறார்

Makkal Needhi Maiam : ம.நீ.ம. பொதுக்குழு கூட்டம்.. நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் என்னென்ன..?

Makkal Needhi Maiam General Meeting Resolution : மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

காக்கா-கழுகு கதை இல்ல.. 'வேட்டையன்' விழாவில் ரஜினி சொன்ன குட்டி ஸ்டோரி என்ன?

Rajinikanth Speech at Vettaiyan Audio Launch : ''தளபதி மாதிரி என்னை நடிக்க சொன்னா எப்படி? இதனால், தான் பைரவி, போக்கிரி ராஜா, முரட்டுக்காளை ஆகிய படங்களில் நடித்து என்னுடைய டிராக்கை மாற்றிக்கொண்டேன்'' என்று ரஜினி தெரிவித்துள்ளார்

‘வாழு, வாழ விடு...’ - விவாகரத்து தொடர்பாக நடிகர் ஜெயம் ரவி விளக்கம்

தனிப்பட்ட விவகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம். யாருடைய பெயரையும்| இழுக்க வேண்டாம்; வாழு, வாழ விடு என விவாகரத்து குறித்த கேள்விக்கு நடிகர் ஜெயம் ரவி பதிலளித்துள்ளார். 

ஏடிஎம் பணம் நிரப்பும் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி கையாடல்.. ஊழியரை அறையில் அடைத்து சித்ரவதை

ஏ.டி.எம். பணம் நிரப்பும் நிறுவனத்தில், ரூ.1 கோடியே 50 லட்சம் வரை கையாடல் செய்த ஊழியர்களை, நிறுவன மேலாளர்கள் அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

மாஞ்சோலை விவகாரம்.. மாவட்ட ஆட்சியரிடம் விசாரணை

மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக 3 நாட்களாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள், பிபிடிசி நிர்வாகத்திடம் தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் விசாரணை நடத்திய நிலையில் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பள்ளிக்கல்வித்துறை திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்

பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகளை நியமித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

பழனி பஞ்சாமிர்தத்தில் கலப்படம்? பாஜக நிர்வாகிகள் மீது புகார்

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து பழனியில் பஞ்சாமிர்தம் ஆவின் நெய்யில் தான் தயாரிக்கப்படுவதாக அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் செல்வகுமார் என்பவர் மீது பழநி கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.