ஸ்டாலின் முடிவு சரியானது... அடுத்து உதயநிதி வந்தால்..... ஜவாஹீருல்லா உற்சாகம்!

உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்குவது இளைய தலைமுறையினர் அரசியலில் வருவதற்கும் சாதிப்பதற்கும் வழிவகுக்கும் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹீருல்லா கருத்து தெரிவித்துள்ளார்

Sep 23, 2024 - 07:09
 0
ஸ்டாலின் முடிவு சரியானது... அடுத்து உதயநிதி வந்தால்..... ஜவாஹீருல்லா உற்சாகம்!
அடுத்து உதயநிதி வந்தால்..... ஜவாஹீருல்லா உற்சாகம்

தென்காசி மாவட்டம்   புளியங்குடியில்  மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் பெருந்திராள் சாதனை விளக்க பொது கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வஃக்பு வாரிய திருத்த சட்டம், அரசியலமைப்பு சட்டம், சிறுபான்மை மக்களுக்கு தந்திருக்கக்கூடிய உரிமை பறிக்கும் சட்டமாக அமைந்திருக்கிறது. மிகச்சரியாகவே எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாமல் பாஜக கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகளும் தங்களுடைய ஆட்சேபத்தை தெரிவிக்கக்கூடிய காரணமாக கூட்டு நடவடிக்கை குழு விசாரித்து வருகிறது. ஆகவே வரும் 30ம் தேதி சென்னைக்கு வரும் குழுவிடம் எங்களது ஆட்சேபனை கருத்துக்களை தெரிவிக்க இருக்கின்றோம். இந்த வஃக்பு வாரிய  சட்டம் என்பது ஒட்டுமொத்தமாக வஃக்பை பாதிக்கக்கூடிய வஃக்பு நிலங்களை பாதுகாக்க முடியாத ஒரு சூழலை ஏற்படுத்தக்கூடிய சட்டமாக உள்ளது. இந்த சட்டத்தை அவர்கள் திருத்தம் என்ற பெயரிலே கொண்டு வந்திருக்கிறார்கள். உண்மையிலே வஃக்பை பாதுகாக்கக் கூடிட எந்த நடைமுறையும் இருக்கக்கூடாது என்பது அவர்களுடைய நோக்கம். தொடர்ந்து இந்த வஃக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அதே போல வருகின்ற 27ம் தேதி அனைத்து முஸ்லிம் கட்சிகள் மற்றும் தோழமை உள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பெரிய போராட்டம் ஒன்றை சென்னையில் நடத்தவுள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன்னர் தழிழ்நாட்டில் மிக அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தது தொடர்பான தகவல்களை நம்முடைய தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். உண்மையிலேயே பாராட்டுகிறோம். ஏறத்தாழ கடந்த பத்து ஆண்டுகள் அதிமுக ஆட்சி காலத்தில் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. ஆனால் இந்த மூன்றரை கால திமுக ஆட்சியில் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறார்கள். அதே நேரத்தில் 2007 - முதல் தற்போது வரை இஸ்லாமியர்களுக்கான இந்த 3.5% விழுக்காடு கல்வியியும், அதே போல அரசு வேலை வாய்ப்பும் எப்படி நிரப்பட்டிருக்கிறது என்பதை தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறேன்.

கனிமவள கொள்ளை கண்டித்து சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய அனைத்து விசயங்களிலும் எங்களது தலையிடு இருந்திருக்கிறது. நாங்கள் போராட்டங்களும் நடத்திருக்கிறோம். தொடர்ந்து நடத்தியும் வருகிறோம். நம்முடைய முன்னோர்கள் இந்த பூமியை நம்மிடம் ஒப்படைத்தார்கள். நம்முடைய எதிர்கால தலைமுறையினருக்கு இந்த பூ உலகை பாதுகாப்பாக நம்முடைய வரும் கால சந்ததியினருக்கு பாதுகாப்பாக கொடுப்பதற்கு மிகப்பெரிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது.

யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அது இந்திய ஜனநாயகம் கொடுத்திருக்கிற மிகப்பெரிய சிறப்பு நிலையாக உள்ளது. ஏன்னென்றால் உலகில் சில நாடுகள் ஜனநாயக நாடுகளாக இருந்தாலும் புதிதாக அரசியல் கட்சிகள் தொடங்கப்படுவது எளிதல்ல. ஆனால் இந்தியாவில் யார் வேண்டுமென்றாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். அந்த அடிப்படையில் சகோதரர் விஜய் ஒரு அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார். அவர் கட்சியை எப்படி நடத்தப்போகிறார், அந்த கட்சியினுடைய கொள்கை, கோட்பாடுகள் என்ன இதையெல்லம் பொறுத்து மக்களுடைய ஆதரவு அமையும்.

மேலும் படிக்க: தலைவிரித்தாடும் நிபா வைரஸ் தொற்று.. கேரளாவில் மீண்டும் 2 பேர் பாதிப்பு!

திராவிட முன்னேட்ட கழகம் 75 ஆண்டுகளை கடந்து தொடர்ந்து தமிழ்நாட்டில் இயங்கி வருகிறது. அந்த அடிப்படையில் ஆட்சியில் இருக்கூடிய முதலமைச்சர் ஸ்டாலின் கட்சியினுடைய நலனை கருத்தில் கொண்டு சகோதரர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்குவது வரவேற்க்கத்தக்கது. இதன் மூலமாக இன்னும் சிறப்பாக இளைய தலைமுறையினர் அரசியலில் வருவதற்கும் சாதிப்பதற்கும் வழிவகுக்கும் என்று கருதுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow