நெற்கொள்முதல் நிலையத்தில் முறைகேடு.. மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார்!
மதுரை நெற்கொள்முதல் நிலையத்தில் நிலைய அலுவலர் முறைகேடு செய்ததால், நெற்பயிர்கள் முளைத்தும், வெடித்தும் வீணாகி சேதம் அடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அய்யங்கோட்டை, பகுதியில் உள்ள அரசு நெற்கொள்முதல் நிலையம் செயல்பட்டுவருகிறது. இங்கு அய்யங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் நிலைய அலுவலர் கொள்முதல் செய்யாத நிலையில், நெல் மூட்டைகளில் இருந்த நெற்கள் முழுமையாக முளைத்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
நெல் கொள்முதல் நிலையம்
மேலும், வெயிலில் நெற்பயிர்கள் காய்ந்து உடைந்துவிட்டதாகவும் கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய குறைதீர் கூட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி முருகன் என்பவர் நேரடியாக பாதிக்கப்பட்ட நெற்களை கையில் ஏந்தியபடி வந்து நெல்கொள்முதல் செய்ய மூட்டை ஒன்றுக்கு 70 ரூபாய் வரை கொள்முதல் நிலைய அலுவலர் கேட்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் கொடுத்து கண்ணீர் மல்க புகார் அளித்தார்.
குறைதீர் கூட்டம்
விவசாயி முருகனுக்கு ஆதரவாக மற்ற விவசாயிகள், குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கூறினா். அப்போது மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி முருகன் கூறியதாவது, அய்யங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அடுக்கிவைத்து காத்திருக்கிறோம். ஆனால் அலுவலர் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யாமல் மூட்டை ஒன்றுக்கு 70 ரூபாய் அலுவலர் கேட்பதாகவும், அலுவலர் முத்துவேல் தனியாக நெற்கொள்முதல் நிலையம் போல சட்டவிரோதமாக நடத்தி அதில் வடநாட்டு இளைஞர்களை வைத்து நெல்மூட்டைகளை வியாபாரிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டு விவசாயிகள் என கணக்கு எழுதுவதாகவும், நாங்கள் கேட்டால் பணம் வேண்டும் என கேட்பதாகவும், இது தொடர்பாக யாரிடம் வேண்டுமானால் புகார் அளித்துகொள்ளுங்கள் என கூறுவதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து விவசாயி முருகனிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றதோடு நெற்கொள்முதல் நிலைய அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தினார்.
விவசாயிகள் கோரிக்கை
இது குறித்து பேசிய விவசாயி முருகன், நெல் கொள்முதல் அலுவலர் முறைகேடு செய்வதாகவும், வியாபாரிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்துவிட்டு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யவில்லை என்றார். இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்த நிலையில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளும் லஞ்சம் பெற்றுவிட்டதால் என்னை எதுவும் செய்ய இயலாது என கொள்முதல் நிலைய அலுவலர் முத்துவேல் இழிவாக பேசுவதாக தெரிவித்தார். இதனால் அலுவலரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயக்குறை கூட்டத்தில் நெற்கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் சேதமடைந்த நெற்பயிர்களுடன் வந்து புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Read More:
ராணிப்பேட்டையில் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!
முன்னாள் அமைச்சர் மீதான வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றம்..!
What's Your Reaction?






