ராணிப்பேட்டையில் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!
ராணிப்பேட்டையில் பேரிடர் காலத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் தத்ரூபமாக செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் இயங்கி வரும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் இயற்கை பேரிடர்களில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேரிடர் மீட்பு
மேலும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் அவ்வப்போது பேரிடர் காலங்களில் இடர்பாடுகளில் சிக்கியுள்ள மக்களை எவ்வாறு மீட்பது குறித்து செயல்முறை விளக்கம் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களின் செயல்முறை விளக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழிப்புணர்வு
மாவட்டத்தில் நடந்த இயற்கை இடர்பாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க மாவட்ட ஆட்சியர் அழைப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் இடர்பாடுகளில் சிக்கி உள்ள மக்களை மீட்டு அவர்களுக்கு முதற்கட்ட சிகிச்சை அளித்து அதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது போல் தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.
இதில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உள்ளிட்ட அனைத்து துறை அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Read More: சீமான் வழக்கு தள்ளுபடி.. ஆவணங்களை சமர்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!
What's Your Reaction?






