TVK Flag : உயரப் பறக்கப்போகிறது விஜய்யின் கொடி.. 100 அடி உயரத்தில் தவெக கொடிக் கம்பம்..
Actor Vijays Party First 100 Feet TVK Flag Hoisted in Theni : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் 100 அடி கொடிக் கம்பம் இன்று தேனியில் ஏற்றப்பட உள்ளது.
Actor Vijays Party First 100 Feet TVK Flag Hoisted in Theni : தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி பயணிக்கத் தொடங்கியிருக்கிறார். கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி, தனது புதிய கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார் விஜய். இதனையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரப்படுத்தப்பட்டது.
ஆறு மாதங்களுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதியன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியினை அறிமுகம் செய்து வைத்தார். இதில், தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட முக்கியமான நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர்.
இதன் அடுத்தக்கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்த விஜய் முடிவு செய்துள்ளார். இது செப்டம்பர் 23ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் விஜய் என்ன பேசப் போகிறார் என்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு பாதுகாப்பு கோரி, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தவெக சார்பில் மனு கொடுக்கப்பட்டது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பெயரில் கொடுக்கப்பட்டுள்ள அந்த மனுவில், மாநாடு குறித்த முழு தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, விக்கிரவாண்டியை அடுத்த வி. சாலை கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறவுள்ளது உறுதியாகியுள்ளது.
இந்த மாநாட்டுக்காக 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும், தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 1.5 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாகனங்களை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் பற்றியும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியினை அறிமுகம் செய்யப்பட்டதன், பின்னர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கட்சி கொடியினை கம்பம் நிறுவி கொடியேற்ற வேண்டுமென அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் கட்சியின் தலைமை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தேனி மாவட்ட தலைவர் தலைமையில் தமிழக வெற்றி கழகத்தின் 100 அடி கொடிக் கம்பத்தில் கொடியேற்றம் நிகழ்வு நடைபெற உள்ளது. இதன்மூலம் தமிழக வெற்றி கழகத்தின் முதல் 100 அடி கொடி கம்பம் தேனியில் நிறுவப்படுகிறது.
What's Your Reaction?