தேவநாதன் யாதவின் சொத்துக்களை ஏலம் விடலாமா?- உயர்நீதிமன்றம் கேள்வி

தேவநாத யாதவின் சொத்துக்களை ஏலம் விட்டு, அதன் மூலம் வரும் பணத்தை பாதிக்கபட்டவர்களுக்கு வழங்கலாமா? என்பது குறித்து பதிலளிக்க உத்தரவு

Mar 25, 2025 - 16:45
Mar 25, 2025 - 17:10
 0
தேவநாதன் யாதவின் சொத்துக்களை ஏலம் விடலாமா?- உயர்நீதிமன்றம் கேள்வி
தேவநாதன் யாதவ்

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். 

மோசடி வழக்கு

இந்த வழக்கில் ஜாமின் கோரி தேவநாதன் உள்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன் ஆகியோர் ஜாமின் கோரி இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்திருந்தனர். 

Read more: பிரபல தெலுங்கு நடிகரை காதலிக்கும் ரிது வர்மா?

இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கபட்டவர்கள் தரப்பில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாகவும், பாதிக்கபட்ட அனைவரும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தேவநாதன் யாதவ் அரசியல் பின்புலம் மற்றும் பணபலம் கொண்டவர் என்பதால் அவருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என தெரிவிக்கபட்டது.

Read more: GT vs PBKS: புதிய கேப்டனுடன் களமிறங்கும் பஞ்சாப்.. சமாளிக்குமா குஜராத்?

சொத்துக்கள் ஏலம்

காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி, விசாரணைக்கு மனுதாரர்கள் ஒத்திவைப்பு வழங்குவதில்லை என தெரிவித்தார்.இதையடுத்து நீதிபதி, தேவநாத யாதவின் சொத்துக்களை ஏலம் விட்டு, அதன் மூலம் வரும் பணத்தை பாதிக்கபட்டவர்களுக்கு வழங்கலாமா? என்பது குறித்து தேவநாதன் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow