உலகம்

வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு: டிரம்ப்பை கைகுலுக்கி வரவேற்ற ரஷ்ய அதிபர் புதின்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையேயான வரலாற்றுச் சந்திப்பு, உக்ரைன் போருக்கு முடிவுகாணும் முயற்சியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு: டிரம்ப்பை கைகுலுக்கி வரவேற்ற ரஷ்ய அதிபர் புதின்!
வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு: டிரம்ப்பை கைகுலுக்கி வரவேற்ற ரஷ்ய அதிபர் புதின்!
உக்ரைன் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள ஒரு ராணுவத் தளத்தில் நடைபெற்றது. மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்தப் பேச்சுவார்த்தை, உலக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 2022-ஆம் ஆண்டு, நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயன்றதால், தங்கள் இறையாண்மைக்கு ஆபத்து எனக் கருதிய ரஷ்யா, உக்ரைன் மீது போரைத் தொடங்கியது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். பல தொலைபேசி உரையாடல்கள் மற்றும் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப் உடனான சந்திப்புக்குப் பிறகு, புதின் நேரில் சந்திக்க ஒப்புக்கொண்டார்.

பேச்சுவார்த்தை முடிந்ததும், இரு தலைவர்களும் செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்தனர். அப்போது பேசிய ரஷ்ய அதிபர் புதின், "போர் நிறுத்தம்குறித்து நாங்கள் இருவரும் வெளிப்படையாகப் பேசினோம். இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், "இது ஒரு ஆக்கப்பூர்வமான சந்திப்பு. பல விஷயங்கள் எங்களுக்குள் ஒப்புக் கொள்ளப்பட்டன" என்று கூறினார். இந்த வரலாற்றுச் சந்திப்பு, எந்தவித உறுதியான முடிவுகளும் எட்டப்படாமல் நிறைவடைந்த போதிலும், இரு தலைவர்களின் நேர்மறையான கருத்துக்கள், போர் நிறுத்தத்திற்கான நம்பிக்கையை அதிகரித்துள்ளன.