PM Modi France Visit 2025 : பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று (பிப். 11) அரசு முறை பயணமாக பாரிஸ் சென்றார். இவருக்கு அந்நாட்டு அதிபர் இமானுவேல் மெக்ரான் நேற்று இரவு விருந்து அளித்தார். பாரிஸில் இன்று நடைபெறும் இரண்டாவது நாள் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் மோடி பங்கேற்க உள்ளார்.
இதில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சீன துணை பிரதமர் டிங் சூயெக்ஸியாங் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். மைக்ரோசாப்ட், கூகுள், ஓபன் ஏஐ உட்பட பல்வேறு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானுடன் நாளை (பிப். 12) பிரதமர் நரேந்திர மோடி நடத்த உள்ள முக்கிய பேச்சுவார்த்தையில் இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் போர் விமானங்கள், 3 நீர்மூழ்கிகளை வாங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து நாளை (பிப். 12) அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் புறப்படுகிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை அவர் வரும் 13-ஆம் தேதி சந்திக்க உள்ளார். கனடா, மெக்ஸிகோ, சீனா உட்பட பல்வேறு நாடுகள் மீது அதிபர் டிரம்பை அதிக வரிகளை விதித்து வருகிறார். ஆனால் இந்தியா மீது அவர் நேரடியாக கூடுதல் வரி விதிக்கவில்லை.இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிக பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: பெண்கள் விளையாட்டில் திருநங்கைகள் பங்கேற்க தடை.. கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப்
ஆனால் அமெரிக்காவில் இருந்து குறைவான பொருட்களே இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த வர்த்தக பற்றாக்குறை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்று தெரிகிறது. அமெரிக்காவின் மின்னணு பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், ரசாயனங்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.