உலகம்

புவி கண்காணிப்புக்காக நிசார் செயற்கைக்கோள்.. இன்று மாலை விண்ணில் பாய்கிறது!

புவி கண்காணிப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்திய விண்வெளி ஆய்வுத்துறை (இஸ்ரோ) மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ (NISAR – NASA ISRO Synthetic Aperture Radar) செயற்கைக்கோள், இன்று மாலை விண்ணில் பாய்கிறது.

புவி கண்காணிப்புக்காக நிசார் செயற்கைக்கோள்..  இன்று மாலை விண்ணில் பாய்கிறது!
புவி கண்காணிப்புக்காக நிசார் செயற்கைக்கோள்.. இன்று மாலை விண்ணில் பாய்கிறது!
இஸ்ரோ மற்றும் நாசா சேர்ந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களைக் கண்காணிப்பதற்காக நிசார் என்ற செயற்கைக்கோளை 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் வடிவமைத்துள்ளன. பல்வேறு கட்ட சோதனைகள் முடிந்த நிலையில் நிசார் செயற்கைக்கோள் GSLV F-16 ராக்கெட் மூலமாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணிகளும் நிறைவடைந்துள்ளன.

ராக்கெட் ஏவுதலின் 27 மணி நேரம் 30 நிமிட கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது. தொடர்ந்து எரிபொருள் நிரப்புதல் உட்பட இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் செயற்கைக்கோள், உலகளாவிய அளவில் நிலநடுக்கம், நிலச்சரிவு, பனிப்பாறை உருகல், பருவநிலை மாற்றங்கள் உள்ளிட்ட இயற்கை நிகழ்வுகளை மிக நுணுக்கமாகக் கண்காணிக்க உதவுகிறது. இன்று (ஜூலை 30) இந்திய நேரப்படி மாலை 6.30 மணியளவில், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கனவெரல் தீவிலிருந்து, யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் நிறுவனம் தயாரித்த அட்ட்லாஸ் V ராக்கெட் மூலம் இது விண்ணில் ஏவப்படுகிறது.

'நிசார்' செயற்கைக்கோள் 2 ஆயிரத்து 392 கிலோ எடையைக் கொண்ட, ஒரு தனித்துவமான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். இதன்மூலம் புவியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், பருவநிலை மாற்றங்கள், பேரிடர் மேலாண்மை உட்பட பல்வேறு அம்சங்கள்குறித்த தகவல்களைப் பெற முடியும். இந்தச் செயற்கைக்கோள் முழு பூமியையும் 12 நாட்களுக்கு ஒருமுறை சுற்றிவந்து துல்லியமான தரவுகள் மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை இரவு, பகல் என அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் வழங்க உள்ளது. அதற்காக எல் பேண்ட், எஸ் பேண்ட் ஆகிய சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிசார் செயற்கைக்கோள், எதிர்வரும் 3 ஆண்டுகள் புவி மேற்பரப்பை தொடர்ந்து கண்காணித்து, பெருமளவு விஞ்ஞான தரவுகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.