இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இன்று அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிபர் பதவியில் இருந்தபோது, தனது மனைவி பேராசிரியர் மைத்ரீ விக்கிரமசிங்கேவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக கடந்த 2023 செப்டம்பரில் இங்கிலாந்துக்கு தனிப்பட்ட பயணமாகச் சென்றபோது, பொது நிதியைப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு காவல்துறை உயரதிகாரிகள் கூறியதாவது, "அரசு நிதியை தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து, அவரை கொழும்பு ஃபோர்ட் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்துகிறோம்," என்று தெரிவித்துள்ளனர். இந்த பயணச் செலவுகள் குறித்து போலீசார் ஏற்கனவே அவரது ஊழியர்களிடம் விசாரணை நடத்தியிருந்தனர்.
வழக்கின் பின்னணி
கடந்த 2023 ஆம் ஆண்டு ஹவானாவில் நடைபெற்ற ஜி77 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பும்போது, விக்கிரமசிங்கே லண்டனில் தங்கியுள்ளார். அங்கு, அவரும் அவரது மனைவியும் வோல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த பயணத்தின்போது தனது மனைவியின் பயணச் செலவுகள் அவராலேயே மேற்கொள்ளப்பட்டன என்றும், எந்த அரசு நிதியும் பயன்படுத்தப்படவில்லை என்றும் விக்கிரமசிங்கே தொடர்ந்து கூறி வந்தார். இருப்பினும், குற்றப் புலனாய்வுத் துறையின் கூற்றுப்படி, விக்கிரமசிங்கே தனது தனிப்பட்ட பயணத்திற்காக அரசுப் பணத்தைப் பயன்படுத்தியதோடு, அவரது மெய்க்காப்பாளர்களின் பயணச் செலவுகளையும் அரசே செலுத்தியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு விக்கிரமசிங்கே இலங்கையின் அதிபராகப் பொறுப்பேற்றார். 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை நிலைப்படுத்தியதில் அவரது பங்கு முக்கியமானது எனக் கூறப்படுகிறது. இருப்பினும், கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலில் அவர் அதிபர் பதவியை இழந்தார்.