வாஷிங்டன்: அமெரிக்காவின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களுக்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார். இதில் அனைத்து முக்கிய டெக் தலைவர்களும் பங்கேற்ற நிலையில், டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் பங்கேற்காதது, அவர்களுக்கிடையே இருந்த விரிசலை உறுதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் (செப்டம்பர் 04 ) அன்று நடைபெற்ற இந்த விருந்தில், பில் கேட்ஸ், டிம் குக், மார்க் ஜூக்கர்பெர்க், சுந்தர் பிச்சை உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். முதலீடு மற்றும் வளர்ச்சி குறித்த விவாதங்கள் இந்த விருந்தின் முக்கிய அம்சமாக அமைந்திருந்தன.
முன்னர், எலான் மஸ்க் டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்து, அதிபர் தேர்தலில் அவர் வெற்றிபெற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அரசாங்க கொள்கை மற்றும் வரி மசோதா தொடர்பான சில கருத்து வேறுபாடுகள் காரணமாக, இருவருக்கும் இடையே சமீபகாலமாக மோதல் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், டிரம்ப் அழைப்பு விடுத்தும் எலான் மஸ்க் அதனைப் புறக்கணித்தாரா? அல்லது அவருக்கு அழைப்பு விடுக்கவில்லையா? என்ற கேள்விகள் அரசியல் மற்றும் தொழில்நுட்ப வட்டாரங்களில் எழுந்துள்ளன. எலான் மஸ்க் இந்த நிகழ்வில் பங்கேற்காதது, அமெரிக்க அரசியல் மற்றும் தொழில்நுட்ப உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.