இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை இரண்டு அடுக்குகளாகக் குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த முக்கிய மாற்றம் செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வரும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் முக்கிய மாற்றம் வர உள்ளது. அதாவது, 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி முறை, இந்த முடிவுக்குப் பிறகு எளிதாக்கப்பட உள்ளது. இதன் காரணமாக, பல பொருட்களின் விலை அதிரடியாகக் குறையும் எனப் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், பொதுமக்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக, தங்கம் மற்றும் வெள்ளி மீதான ஜிஎஸ்டியை அப்படியே வைத்திருக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது.
அதன்படி, தங்கம் மற்றும் வெள்ளிக்கு ஏற்கனவே அமலில் உள்ள 3 சதவீத ஜிஎஸ்டியும், நகைகளின் செய்கூலிக்கு 5 சதவீத ஜிஎஸ்டியும் தொடர்ந்து பொருந்தும். உதாரணமாக, நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகையை வாங்கினால், ரூ.3,000 ஜிஎஸ்டி கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும். ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த முடிவால், தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் எந்த விலை மாற்றமும் இருக்காது என்பது உறுதியாகியுள்ளது.