உலகம்

அமெரிக்காவின் வர்த்தக வரிவிதிப்பு - இணைந்து எதிர்கொள்ள இந்தியாவிற்கு சீனா அழைப்பு!

இந்தியா, சீனா மீதான அமெரிக்காவின் வர்த்தக வரிவிதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், வரி விதிப்பு இணைந்து எதிர்ப்பு தெரிவிக்க இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்காவின் வர்த்தக வரிவிதிப்பு - இணைந்து எதிர்கொள்ள இந்தியாவிற்கு சீனா அழைப்பு!

சீனா பொருட்கள் மீது அமெரிக்கா 104% அளவுக்கு வரியை விதித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் உச்சத்தை எட்டி உள்ளது. இது இந்தியாவையும் பாதிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஏப்ரல் 2ம் தேதி உலகின் சுமார் 100 நாடுகள் மீது வர்த்தக வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அப்போது இந்தியாவுக்கு 26 சதவீதம், 34 சதவீதம், இலங்கைக்கு 44 சதவீதம் என வரி விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் இந்தியா மீதான 26 சதவீத வரிவிதிப்பு அமலுக்கு வந்துள்ளது.

அமெரிக்காவுக்கு பதிலடியாக சீனாவும் 26 சதவீத பரஸ்பர வரியை விதித்தது. இதனை திரும்பப் பெறக்கோரி ட்ரம்ப் விதித்த 24 மணி நேர கெடு முடிவுக்கு வந்த நிலையில், சீனா மீதான 104 சதவீத அமெரிக்க வரிவிதிப்பும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

2024ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான பொருட்கள் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இதில் சீனாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்கள்தான் அதிகமாக உள்ளது. மேலும், அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு குறைவாகவே பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.

அமெரிக்க வரிவிதிப்பை எதிர்த்து இணைந்து செயல்படுவோம் என இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்காவின் எதேச்சதிகாரப் போக்கால் தெற்குலக நாடுகளின் வளர்ச்சி உரிமை பறிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இரு பெரும் வளரும் நாடுகளாக திகழும் இந்தியாவும் சீனாவும் இதனை எதிர்த்து நிற்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பை எதிர்கொள்ள இணைந்து செயல்படுவோம் என்று சீனா இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக சீன நாட்டின் தூதரக செய்தித்தொடர்பாளர் எக்ஸ் தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அந்தப்பதிவில், சீனா-இந்தியா பொருளாதார, வர்த்தக உறவு இருதரப்பு நன்மைகளை அடிப்படையாக கொண்டது. அமெரிக்காவின் வரிவிதிப்பை எதிர்கொள்ளும் உலகின் 2 வளர்ச்சியடைந்த நாடுகள் இணைந்து செயல்பட்டு இந்த கடினமான சூழ்நிலையை கடக்க வேண்டும்' என்று இந்தியாவிற்கு மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளார்.