தமிழ்நாடு

காதலனுடன் சென்ற இளம்பெண் - காரை மறித்து பாசப்போராட்டம் நடத்திய பெற்றோர்

பெற்ற மகளை தன்னுடன் அனுப்ப வேண்டும் எனக் கூறி கார் செல்லவிடாமல் குறுக்கே படுத்துக்கொண்டு ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெற்றோர்களின் பாச போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

காதலனுடன் சென்ற இளம்பெண் - காரை மறித்து பாசப்போராட்டம் நடத்திய பெற்றோர்
காதலனுடன் இளம்பெண் சென்ற கார் முன் படுத்து பெற்றோர் பாசப்போராட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அப்மனு - வேதா தம்பதிகளில் இளைமகள் தீபிகா 12-ம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ளார். இந்நிலையில் இளம் பெண்ணிற்கு வரன் பார்த்து நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இளைஞருடன் காதல்

இந்நிலையில் கடந்த பதினொன்றாம் தேதி அன்று தீபிகா வீட்டை விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அங்கும் இங்கும் தேடிப் பார்த்தனர் ஆனால் இளம் பெண் கிடைக்காததால் இந்த சம்பவம் குறித்து நெமிலி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

இந்நிலையில் இளம்பெண் திருவண்ணாமலை பகுதியில் உள்ள இளைஞருடன் காதல் ஏற்பட்டதில் அவருடன் சென்று விட்டதாக தகவல் தெரிய வந்தது.மேலும் இளம் ஜோடியை ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

பெற்றோரின் பாசப்போராட்டம்

அதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்ற இளம் பெண்ணின் பெற்றோர்கள் தன்னுடைய மகளை தங்களுக்கு ஒப்படைக்கும்படி கெஞ்சி கேட்டுக் கொண்டனர். அதையும் மீறி நெமிலி காவல் நிலையத்திற்கு இளம் ஜோடியை அழைத்துச் சென்ற வாகனம் முன்பு அந்தப் பெண்ணின் தந்தை குறுக்கே படித்துக்கொண்டு தன்னுடைய மகளை ஒப்படைக்கும்படி கேட்டுக் கொண்டார். பெற்றோர்களின் பாசப் போராட்டம் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.