தமிழ்நாடு

மழைநீர் வடிகால் பள்ளத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை!

சென்னை, சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் 42 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மழைநீர் வடிகால் பள்ளத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை!
மழைநீர் வடிகால் பள்ளத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை!
சென்னை, சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் 42 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர் மர்மமான முறையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூளைமேடு, வீரபாண்டி நகர் 1-வது தெருவில் தோண்டப்பட்ட மழைநீர் வடிகால் பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் இன்று காலைச் சுமார் 40 வயது மதிக்கத் தக்க பெண் சடலம் மிதந்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த தீபா (42) என்பதும், அவர் வீட்டு வேலை செய்து வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

மர்ம மரணம்

இந்தப் பெண் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து இறக்கவில்லை எனவும், அவரது கைகள் கட்டப்பட்ட நிலையில் உடல் மீட்கப்பட்டதாகவும் சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அருகில் உள்ள ஒரு சிறிய பள்ளத்தில்தான் உடல் மீட்கப்பட்டது என்றும் மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. இந்தத் தகவல், இது ஒரு விபத்து மரணம் அல்ல, மாறாகச் சந்தேக மரணம் என்பதை உறுதிப்படுத்துகிறது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள சூளைமேடு போலீசார், இது கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்து உடலை மழைநீர் வடிகால் பள்ளத்தில் வீசிச் சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார், அப்பகுதியில் உள்ள **சிசிடிவி காட்சிகளை**க் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் போராட்டம்:

சம்பவ இடத்திற்கு வந்த அரும்பாக்கம் காவல் உதவி ஆணையர் ரமேஷை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள், மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பல நாட்களாகத் தெருவிளக்குகள் எரியாமலும், பள்ளங்கள் மூடப்படாமலும் இருந்ததே இந்தப் பகுதிக்குச் செல்ல முடியாத நிலைக்குக் காரணம் என்று குற்றம் சாட்டினர்.

மக்கள் பேசுகையில், "நாயின் உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநகராட்சி, மக்களின்உயிரைக் கண்டு கொள்வதில்லை" என்றும் ஆவேசமாகக் கூறினர். இதற்குப் பதிலளித்த வார்டு கவுன்சிலர் ராமலிங்கம், அலட்சியமாகச் செயல்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். அண்ணாநகர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மோகன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு, மக்களிடம் பேசினார்.

சோகத்தில் குடும்பத்தினர்:

உயிரிழந்த தீபாவின் குடும்பத்தினர் இந்தச் சம்பவத்தால் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். திருமணம் ஆன சில மாதங்களிலேயே கணவரை இழந்த தீபா, தனது 20 வயது மகள் ஜெனிபர் மற்றும் தாயாருடன் வசித்து வந்தவர். குடும்பத்திற்கு இருந்த ஒரே ஆதரவும் தற்போது இல்லாமல் போனதால், குடும்பத்தினர் மிகுந்த வேதனையில் உள்ளனர். தீபாவுக்குச் சரியாக நடக்க முடியாத பழக்கம் இருந்ததால், அவர்இது போன்றற பள்ளத்தில் விழுந்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.