ராணுவத்தின் நடவடிக்கைக்கு பாராட்டு
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “ராணுவ வீரர்களின் துணிச்சலான நடவடிக்கைக்கு பாராட்டுகள். பிரதமர் மோடிக்கு நாடு துணை நிற்கிறது. காஷ்மீரில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு அமைதி நிலவும், முன்பு ரத்தத்தால் சிவந்த ரோஜாக்கள், தற்போது வெள்ளை ரோஜாக்களாக மலரும் என்று தனது கருத்தை பதிவு செய்தார்.
ஆனால், தமிழகத்தில் சிலர் இந்த பாதுகாப்பு நடவடிக்கையை விமர்சிப்பது வேதனை அளிப்பதாக தமிழிசை கூறினார். சட்ட விரோதமாக தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூறியதற்கு, மதக் கலவரத்தை தூண்டுவதாக தமிழக அமைச்சர்களும் முதல்வரும் பேசுவது கண்டிக்கத்தக்கது என்றார். கோவையில் சட்டவிரோதமாக பணியாற்றியவர்கள் கைது செய்யப்பட்டது இதற்கு சான்று என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் பாதுகாப்பு முக்கியம் என்பதை உணராமல், பிற மாநில முதல்வர்கள் பிரதமருக்கும் ராணுவத்திற்கும் பாராட்டு தெரிவிக்கும்போது, தமிழக முதல்வர் பாராமுகமாக இருப்பது வருத்தம் அளிக்கிறது என்று தமிழிசை தெரிவித்தார்.
முதல்வர் கனவு
தி.மு.க அரசின் நான்கு ஆண்டு கால ஆட்சியில் செவிலியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மருத்துவர்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து உள்ளதாகவும், வேங்கை வயல் பிரச்சனைக்கு இரண்டு ஆண்டுகளாகியும் தீர்வு காணப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
தி.மு.கவினர் நான்காண்டு நிறைவை கொண்டாடும்போது மக்கள் திண்டாடுகிறார்கள் என்றும், இந்த கொண்டாட்டம் இன்னும் பத்து மாதங்களில் முடிவுக்கு வரும் என்றும் தமிழிசை கூறினார். முதல்வர் ஸ்டாலின் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறுவதையும், புதிதாக வருபவர்கள் எல்லாம் முதல்வர் கனவில் இருப்பதாக சொல்வதையும் அவர் விமர்சித்தார். அவரது மகன் மட்டும் தான் முதல்வராக வர முடியுமா என்றும், யார் வேண்டுமானாலும் அந்த பதவியை அடைய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பாதுகாப்பு முக்கியம்
தி.மு.க வின் சந்தர்ப்பவாத ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.அமைச்சர் சேகர்பாபுவின் விமர்சனத்திற்கு பதில் அளித்த தமிழிசை, தமிழ்நாட்டின் தண்ணீரை குடித்தால் தான் குளிர் ஜுரம் வரும் என்றார். டாஸ்மாக்கில் தண்ணீர் கிடைக்கிறது ஆனால் குடிநீர் கிடைப்பதில்லை என்றும் அவர் சாடினார்.ராணுவ தாக்குதல் குறித்து பேசிய அவர், ராணுவத்திற்கு துணை நிற்போம் என்பதை விட பிரதமருக்கு துணை நிற்போம் என்ற வார்த்தையை கூட தமிழக அரசால் சொல்ல முடியவில்லை என்று வருத்தப்பட்டார். சிறிய சாதனைக்கே முதல்வருக்கு பெருமை தேடும் இவர்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தில் பரந்த மனப்பான்மையுடன் செயல்படவில்லை என்றார்.
தாக்குதலில் பெண்கள் முன்னிறுத்தப்பட்டது குறித்து பேசிய தமிழிசை, பிரதமர் பெண்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை இது காட்டுவதாகவும், ராணுவத்தில் பெண்கள் பைலட்டுகளாக இருப்பது பெருமையாக இருப்பதாகவும் கூறினார். தீவிரவாத தாக்குதலை எந்த ரூபத்தில் வந்தாலும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்றார். சட்டவிரோத வெளிநாட்டினர் விவகாரத்தில், சிகிச்சைக்கு வந்தவர்களை வெளியேற்றுவதாக கூறி தமிழக அரசு விமர்சனம் வைத்தது, ஆனால் டிரான்ஸ்பிளான சிகிச்சைக்கு வந்தவர்களுக்கு அது ஒரு எமர்ஜென்சி கிடையாது. அது ஒரு ஆப்ஷனல் சிகிச்சை தான், முதலில் நம் நாடு நமக்கு முக்கியம். நாட்டின் பாதுகாப்பு தான் முக்கியம் என்றும், இதில் யாரும் இரக்கம் காட்ட முடியாது என்றும் அவர் திட்ட வட்டமாக தெரிவித்தார்.
மாற்று கருத்து கூறுவது கண்டிக்கத்தக்கது
துப்பாக்கி ஏந்தி போராடுவாரா தமிழிசை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தான் துப்பாக்கி ஏந்துவதை விட இந்திய பெண்கள் துப்பாக்கி ஏந்தி போராடுவது பெருமை அளிப்பதாகவும், தனது சொற்போராட்டத்தின் மூலமே ஆட்சியின் அவலங்களை வெளிப்படுத்துவோம் என்றும் கூறினார். ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு நேரமில்லை என்றும், 2026 தேர்தலில் மக்கள் இதற்கு பதில் அளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இறுதியாக பேசிய தமிழிசை, ராகுல் காந்தியோ, ஸ்டாலினோ இந்த நேரத்தில் தேசத்திற்கு துணை நிற்க வேண்டும். காஷ்மீர் குறித்து மாற்று கருத்து கூறுவது கண்டிக்கத்தக்கது என்றும், அனைவரும் நாட்டுப்பற்றுடன் ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.