2021ல் ஆட்சி அமைத்த திமுக, ஆரம்பத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகத் தோன்றினாலும், இன்னும் பல துறைகளில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறியதாக விமர்சனங்கள் எழுந்தன. என்னதான் சமூக நலனுக்கான திட்டங்கள் நன்கு வடிவமைக்கப்பட்டிருந்தாலும், நிலையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று பல தரப்பிலிருந்து கூறப்பட்டது. மக்களோடு நேரடி தொடர்பு இருப்பதாகச் சொன்னபோதும், பல இடங்களில் பொதுமக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருந்து வருகிறது. மொத்தத்தில், திமுக ஆட்சி ஒரு முழுமையான மக்கள்நல ஆட்சியாக அமையவில்லை என்றே பல விமர்சனக் குரல்கள் ஒலித்தன. இதற்கெல்லாம் சில தேர்தல் வாக்குறுதிகளை 4 ஆண்டுகளாக திமுக நிறைவேற்றாமல் இருப்பதே காரணம் என்கின்றனர் அரசியல் புள்ளிகள்.
வாகன ஓட்டிகளை வஞ்சிக்கும் பெட்ரோல் டீசல் விலையில், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது திமுக. ஆனால் இந்த 4 ஆண்டு கால ஆட்சியில் அது நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. இல்லத்தரசிகளை கவரும் விதமாக, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என கூறிய திமுக அதனையும் நிறைவேற்றவில்லை.
இதுமட்டுமா என்று பார்த்தால், மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை கொண்டுவரப்படும் எனக்கூறப்பட்டது அதுவும் நடந்தபாடில்லை. இத்தோடு நின்றுவிடவில்லை இந்த லிஸ்ட், நியாய விலைக் கடைகளில் உளுந்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதி காற்றில் விடப்பட்டது, மாநிலத்தில் ஏற்கனவே அம்மா உணவகங்களுக்கு மூடுவிழா நடத்தப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் கலைஞர் உணவகம் அமைக்கப்படும் என சத்தியம் செய்யப்பட்டது.
ஆசிரியர் பணியே அரப்பணி, அப்பணிக்கே உன்னை அர்ப்பணி என போற்றப்படும் ஆசியர்களையே வஞ்சிக்கும் விதமாக, ’பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவீர்கள்’ என நம்பிக்கை அளித்து பின்னர் அதை நிறைவேற்றாமல் உள்ளது திமுக அரசு.
இதுமட்டுமல்லாது சம வேலை சம ஊதியம் என்கிற மற்றொரு கோரிக்கையும் வெகு நாட்களாக வைத்துவருகின்றனர் ஆசிரியர்கள். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31ம் தேதி நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். இவர்கள் நீண்ட காலமாக போராடிவரும் நிலையில், ஆசிரியர்களுக்கு சம வேலை சம ஊதியம் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்திருந்தது. ஆனால் ஆட்சி அமைத்து நான்கு ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்த ஆசிரியர்கள் போராட்டம் நடத்தும் நிலையே நிலவிவருகிறது.
உழைக்கும் வர்கத்தின் முக்கிய பகுதியான மீனவர் சமுதாயத்தினரின் வாக்குகளை குறிவைத்து தேர்தலுக்கு முன் ஒரு வாக்குறுதியை தந்தது திமுக. மீனவர் சமுதாயத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்பதே அவ்வாக்குறுதி. ஆனால் ஆட்சி நடத்திய இந்த 4 ஆண்டுகளில் அதை நிறைவேற்றவில்லை.
அதோடு சேர்த்து, மீனவர்களின் கழுத்தை நெறிக்கும் பிரச்சனை ஒன்று உள்ளது. அதுதான் இந்த கச்சத்தீவு விவகாரம். கச்சத்தீவு யாருக்கு சொந்தம் என்கிற கேள்வி இன்று நேற்றல்ல, ஏறக்குறைய 1920களில் இருந்து தொடர்கதையாகி வருகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்போம், கச்சத்தீவு மீட்போம் என் வாக்குறுதி அளித்திருந்தது திமுக. ஆனால் அந்த பிரச்சனை இதுநாள் வரை தீர்வுகாணாமல் இருக்கிறது என்பதற்கு எல்லையில் மீனவர்கள் கைதாவதும், கொலை செய்யப்படுவதுமே சாட்சி.
அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்னர் பணிகாலத்தில் பெற்ற ஊதியத்தில் குறிப்பிட்ட பங்கை ஒரு நபர் மரணிக்கும் வரை ஒவ்வொரு மாதம் வழங்கப்படும் ஓய்வூதிய திட்டத்திலும் உள்ள பஞ்சாயத்தை 4 ஆண்டுகளாக நிலுவையில் போட்டுள்ளது திமுக. இதனால் 2004ம் ஆண்டில் நிறுத்தி வைக்கப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும் என்றீர்களே? அது எப்போது நடக்கும் என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இடதுசாரி அரசியலை செய்துவரும் திமுக, சமூகநீதியையும், பேச்சு சுதந்திரத்தையும் கண்களாக கருத்தி வருவதாக கூறுகிறது. இதனடிப்படையிலேயே சட்டமன்ற நிகழ்வுகள் எல்லாம் நேரலை செய்யப்படும் எனக் தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது. இதனால் 2011ம் ஆண்டில் இருந்து 2021ம் ஆண்டு வரை சட்டமன்ற நிகழ்வுகள் ஷூட் செய்யப்பட்டு, எடிட் செய்யப்பட்டு நமது கைகளுக்கு வந்த நிலை மாறும் என பலரும் நம்பினர். ஆனால் புது ரூட் ஒன்றை போட்டு, சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையில் காட்டுகிறேன் ஆனால் எதிர்க்கட்சி தலைவர் பேசும் போது நேரலையை துண்டித்துவிடுவேன் என இறங்கியுள்ளது திமுக. இதனால் இப்படி வெளிப்படைத்தன்மை இல்லாத அரசை ஏன் நம்பவேண்டும் என மக்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
இத்தோடு நின்றுவிடவில்லை திராவிட மாடலின் காற்றில் விடப்பட்ட வாக்குறுதிகள். மதுரையில் ஐடி பார்க் கட்டித்தருவதாக கூறியது, ஐல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதாக கூறியது, தமிழகத்தில் வேலைவாய்ப்புகளில் 75% தமிழர்களுக்கே என்ற சட்டம் நிறைவேற்றப்படும் என கூறியது இப்படி பல வாக்குறுதிகள் காற்றில் கலந்துவிட்டன.
இதுவரை கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதம் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக கூறிவருகிறது திமுக. ஒருபுறம் பெண் வளர்ச்சி, விவசாய நலன், குழந்தைகளுக்கான கல்வி, திறன்மேம்பாடு என பல திட்டங்களை திமுக அறிவித்து வந்தாலும் இப்படி சில வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வஞ்சிப்பதால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் இந்த ஆட்சியில் நிர்வாகக் குழப்பங்கள் அதிகம் காணப்பட்டன எனவும் அரசியல் விமர்சகர்கள் விமர்சனம் செய்கின்றனர். இதனால், டிசைன் டிசைனாக திட்டங்களை பேசி பில்டிங்கை ஸ்டிராங்காக காட்டினால் போதாது, அத்திட்டங்களை நிறைவேற்றி பேஸ்மெண்ட்டையும் ஸ்டிராங்காக ஆக்க வேண்டும் என பலரும் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் திமுக 2.0 உருவாக வேண்டுமானால் இருக்கும் இந்த 1 ஆண்டில் நிலுவையில் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.